usharanikannabiran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  usharanikannabiran
இடம்:  chennai
பிறந்த தேதி :  25-Apr-1969
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Nov-2012
பார்த்தவர்கள்:  863
புள்ளி:  251

என் படைப்புகள்
usharanikannabiran செய்திகள்
usharanikannabiran - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2020 7:43 pm

என் சுவாசக்காற்று

அரிச்சுவடியாக
அறிமுகமானது!

பாடங்களாக
பரிச்சயமானது!

கதைகள் சொல்லி
நெருக்கமானது!

உலகம் விரித்து
கண்முன் தந்தது!

அறிஞர் கூட்டம்
அறியச் செய்தது!

முக்காலம் கண்முன்
கொண்டு வந்தது!

இடம் பெயர்ந்திட
இடம் கொடுத்தது!

கலைகள் அனைத்தும்
கல் என நின்றது!

படிக்கும் பொழுதுகள்
என் விழுதுகள் ஆகும்!

அவை தரும் தீர்வால்
என் பழுதுகள் போகும்!

எனக்குள் பலப்பல
விதைகள் தூவும்!

விதைகள் முளைத்திட
உதவிகள் ஏவும்!

சத்தமின்றி அவை
வித்தைகள் நிகழ்த்தும்!

தணியாது என்றும்
புத்தகம் மீதான தாகம்!

புத்தகம் ஆனது என்
சுவாசத்தின் பாகம்!

மேலும்

usharanikannabiran - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2020 7:41 pm

ஒரு நூலின் கவலை

நற்கருத்துக்களின்
சொற்கோவை நான்!

நானிலத்தின்
அன்றாடத்தேவை நான்!

ஆயினும் உலகத்தின்
பொதுமறையாம் எனைக்
கற்றார்கள் என்வழி
நின்றாரில்லை!

நின்று பேரின்பம்
பெற்றாரில்லை!

மறந்தும் யாருக்கும்
குறிக்கோளாய் இல்லை நான்!

சிறந்ததெனக் கருதி
ஆளப்பட்டே வருகிறேன்
மேற்கோளாய் மட்டும் தான்!

மேலும்

usharanikannabiran - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2020 7:39 pm

புத்தகம்

சுவையாய் கதைப்பர்
சொந்தக்கதைகள்!
சோகக்கதைகள்!

சலிக்காது விவரிப்பர்
சமையல் செய்முறை!

முந்தித் தருவர்
மருத்துவக்குறிப்பு!

சந்தேகங்கள் தீர
கொடுப்பர் எடுப்பாய் துணுக்குகள் !

படிப்பு பற்றி
கேட்டால் கொட்டுவர்
விரிவாய் விவரம்!

பகர்வர்
தம் பயண அனுபவம்
பக்கம் பக்கமாய்...

தாமே புதிராய் இருந்து
குழப்புவர் நம்மை
சிலநேரம்!

பேச்சின் இடையே
நகைச்சுவையும்
வந்துவீழும்
ரசிக்கும்படி.....

ஒவ்வொரு சகமனிதனும்
ஒப்புமை இல்லா புத்தகமே
நம் ஒவ்வொருவருக்கும்....

மேலும்

usharanikannabiran - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2020 7:36 pm

நிராகரிப்பு

தொலைவில் கொண்டு வைத்தது
தொலைக்காட்சி!

கண்டு கொள்ளாமல் செய்தது
கணினி!

கை கழுவச் சொன்னது
கைப்பேசி!

கேட்பாரின்றிக் கிடக்கின்றன
அலமாரிப் புத்தகங்கள்!

மேலும்

நறுக்கென்று .. அருமையாய்.. வாழ்த்துக்கள் . 23-Jun-2020 10:02 pm
usharanikannabiran - usharanikannabiran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2019 12:34 pm

சிலந்தியின் வருத்தம்

என் வீடு
மொத்தமாய்ப்
போனதைக்
கூறாமல்

கூறிக்கொள்கிறாய்...
உன்வீடு
சுத்தமாய்
ஆனதாய்....

மேலும்

கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி 25-Oct-2019 6:39 pm
சிலந்தியின் வருத்தம் என் நெஞ்சை பிழிந்தது... அழகான சிந்தனை... 25-Oct-2019 7:58 am
ஆஹா அருமை . 24-Oct-2019 8:01 pm
அருமை 24-Oct-2019 4:12 pm
usharanikannabiran - usharanikannabiran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2019 3:48 pm

இயற்கை

நீலக்கடலில் நீரை ஆவியாய் முகந்து
சூலுற மேகங்கள் தேடிச் சேர்த்து
சில்லென்ற காற்றால் முட்டிமோதி
பல்லுயிர் பிழைக்க பயிர்கள் செழிக்க
நல்மழை நல்கி நகைக்கும் இயற்கை!

மேலும்

மிகவும் அருமை... 09-Nov-2019 10:42 pm
நல்ல தமிழ். அருமை. 03-Oct-2019 8:50 pm
நன்றி😊 01-Oct-2019 2:20 pm
அருமை அருமை.... 29-Sep-2019 12:31 pm
usharanikannabiran - usharanikannabiran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2019 3:49 pm

எண்ணும் எழுத்தும் கண்ணென்றார் வள்ளுவர்!
ஏழையும் கல்விக்கண் பெற
வழியானார் காமராஜர்!

பசிப்பிணி நீக்கலே அறம்
என்றார் வள்ளலார்!
சத்துணவளித்து அவ்வழி
நின்றார் காமராஜர்!

வரப்புயர நீர் உயரும்
அறிவுறுத்தினார் ஔவையார்!
அணைகள் கட்டி நீர்வளம்
உயர்த்தியவர் காமராஜர்!

அறிவில் கரைகண்டோர் ஆட்சிகளில்
ஆங்காங்கு கறை உண்டு!
அறவழிஆட்சி செய்தோர்
இவர் போல யாருண்டு??

மேலும்

நன்றி ஐயா😊 01-Oct-2019 2:19 pm
அருமை ஆழ்ந்த ஒப்புமை...... 30-Sep-2019 5:18 pm
usharanikannabiran - usharanikannabiran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2018 12:45 pm

தவிர்ப்பு

எல்லோரையும்
கண் கொண்டு கண்டாய்
எனைத் தவிர்த்து...

எல்லோரிடமும்
முகம் கொடுத்து பேசினாய்
எனை தவிர்த்து...

எல்லோரிடமும்
இனிமை பொங்க பழகினாய்
எனை தவிர்த்து...

ஓ !தவிர்த்தல் ஒரு மொழியோ?
உன்னில் நான் உயிர்த்தல் சொல்ல...

மேலும்

நன்றி நண்பரே😊 02-Sep-2018 3:54 pm
அருமை நட்பே.... 01-Sep-2018 6:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

மணி அமரன்

மணி அமரன்

திருநெல்வேலி
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மணி அமரன்

மணி அமரன்

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
மேலே