ஒரு நூலின் கவலை

ஒரு நூலின் கவலை

நற்கருத்துக்களின்
சொற்கோவை நான்!

நானிலத்தின்
அன்றாடத்தேவை நான்!

ஆயினும் உலகத்தின்
பொதுமறையாம் எனைக்
கற்றார்கள் என்வழி
நின்றாரில்லை!

நின்று பேரின்பம்
பெற்றாரில்லை!

மறந்தும் யாருக்கும்
குறிக்கோளாய் இல்லை நான்!

சிறந்ததெனக் கருதி
ஆளப்பட்டே வருகிறேன்
மேற்கோளாய் மட்டும் தான்!

எழுதியவர் : Usharanikannabiran (23-Jun-20, 7:41 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 83

மேலே