என் சுவாசக்காற்று

என் சுவாசக்காற்று

அரிச்சுவடியாக
அறிமுகமானது!

பாடங்களாக
பரிச்சயமானது!

கதைகள் சொல்லி
நெருக்கமானது!

உலகம் விரித்து
கண்முன் தந்தது!

அறிஞர் கூட்டம்
அறியச் செய்தது!

முக்காலம் கண்முன்
கொண்டு வந்தது!

இடம் பெயர்ந்திட
இடம் கொடுத்தது!

கலைகள் அனைத்தும்
கல் என நின்றது!

படிக்கும் பொழுதுகள்
என் விழுதுகள் ஆகும்!

அவை தரும் தீர்வால்
என் பழுதுகள் போகும்!

எனக்குள் பலப்பல
விதைகள் தூவும்!

விதைகள் முளைத்திட
உதவிகள் ஏவும்!

சத்தமின்றி அவை
வித்தைகள் நிகழ்த்தும்!

தணியாது என்றும்
புத்தகம் மீதான தாகம்!

புத்தகம் ஆனது என்
சுவாசத்தின் பாகம்!

எழுதியவர் : Usharanikannabiran (23-Jun-20, 7:43 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 134

மேலே