நாவடக்கம்

காற்றாடி மாஞ்சா நூல்
கழுத்தை பதம் பார்க்கும்
ஊடலில் நீ விடும் சுடுசொல்
நம் காதலை அறுக்கும்
இதற்குமேல் நான் ஒன்றும்
சொல்ல விரும்ப வில்லை

என்னைவிட்டு போகும் முன்
அவள் சொன்ன வார்த்தைகள்
போனவள் திரும்பவே இல்லை
மாஞ்சா ஆனதோ என்வார்த்தைகள்
டீ குடிக்க போன ஓட்டலில்
அன்றைய சிந்திக்க என்று
எழுதி வைத்த போர்ட்
'யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு'
டீ குடிக்காது கால் போன போக்கில்
போனே நான்

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (23-Jun-20, 8:22 pm)
பார்வை : 112

மேலே