மலை நகரம்

உறைய வைக்கும்
குளிர்

உடல் மீது வந்து
மோதி செல்லும்
வாடை காற்று

பற்களின் படபடப்பு
அதன் நடுக்கத்தில் தெரிகிறது

புகைக்காமலேயே
வாயில் இருந்து
வெளி வரும் புகை
இத்தனையிலும்
அழகிய முகம் காட்டி
உடல் முழுவதும்
போர்த்திய படி
செல்லும் பெண்கள், ஆண்கள்
அங்கங்கு அடுப்பு
கனல் எரிய
அதன் மேல் இருக்கும் பால் கொதிக்கும் ஓசை
அதை ஆற்றியபடி
அருகில் ஒருவர் நிற்க
சாயா சாயா அழைக்கும் சாயா
கடைகள்
சீராக சீருடையுடன் அதன் மேல் கலர் கலராய் ஸ்வெட்டருடன் மாணவ மாணவிகள்
கற்பூர ஆரத்தி காட்டி மணி ஓசையுடன் வழி காட்டும் கோயில்கள்
சற்று தொலைவில்
பளிச்சிடும் வெண்மை உடையுடன் பாதிரிமார்களுடன் வருவதும் போவதுமாய் காணும் சர்ச்
அடுத்த தெரு முனையில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பக்தர்களுக்கு
"து ஆ"
தொழுகைக்கு அழைத்தும் நினைவு படுத்தியும் மசூதி
இத்தனையும் கடந்து..
பச்சை கம்பளமாய்
விரிந்து கிடந்த
தேயிலை தோட்டங்களில்
வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாய்

எழுதியவர் : தாமோதரன். (23-Jun-20, 8:39 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : malai nakaram
பார்வை : 52

மேலே