புத்தகம்
புத்தகம்
சுவையாய் கதைப்பர்
சொந்தக்கதைகள்!
சோகக்கதைகள்!
சலிக்காது விவரிப்பர்
சமையல் செய்முறை!
முந்தித் தருவர்
மருத்துவக்குறிப்பு!
சந்தேகங்கள் தீர
கொடுப்பர் எடுப்பாய் துணுக்குகள் !
படிப்பு பற்றி
கேட்டால் கொட்டுவர்
விரிவாய் விவரம்!
பகர்வர்
தம் பயண அனுபவம்
பக்கம் பக்கமாய்...
தாமே புதிராய் இருந்து
குழப்புவர் நம்மை
சிலநேரம்!
பேச்சின் இடையே
நகைச்சுவையும்
வந்துவீழும்
ரசிக்கும்படி.....
ஒவ்வொரு சகமனிதனும்
ஒப்புமை இல்லா புத்தகமே
நம் ஒவ்வொருவருக்கும்....