பெருந்தலைவர்
எண்ணும் எழுத்தும் கண்ணென்றார் வள்ளுவர்!
ஏழையும் கல்விக்கண் பெற
வழியானார் காமராஜர்!
பசிப்பிணி நீக்கலே அறம்
என்றார் வள்ளலார்!
சத்துணவளித்து அவ்வழி
நின்றார் காமராஜர்!
வரப்புயர நீர் உயரும்
அறிவுறுத்தினார் ஔவையார்!
அணைகள் கட்டி நீர்வளம்
உயர்த்தியவர் காமராஜர்!
அறிவில் கரைகண்டோர் ஆட்சிகளில்
ஆங்காங்கு கறை உண்டு!
அறவழிஆட்சி செய்தோர்
இவர் போல யாருண்டு??