தளராதுளிர்
தளரா துளிர்
மரத்தின் இறுதிநாள் குறித்தாயிற்று!
மரத்தின் கனி ,காய்,பூக்கள்
பறித்தாயிற்று!
மரத்தின் கிளைகள் தறித்தாயிற்று!
மரத்தின் இலைகள் உதிர்த்தாயிற்று!
மரத்தின் பட்டைகளை உரித்தாயிற்று!
மரத்தையே கட்டைகளாய்
வகுத்தாயிற்று!
வார இடைவெளிக்குப்பின்
மரத்தை தூரோடு பெயர்க்க
ஆட்களும் வந்தாயிற்று!
மீண்டும் நின்று பயன்தர
மீண்டும் வாய்ப்பு தந்தாலே
ஆயிற்று என
தளிர்க்கரம் விரித்து
தளராது நின்றது
அடிமரத்துளிர்!!