விடை தெரியா கேள்விகள்

விடை தெரியா கேள்விகள்

பல்நூல்கள் ஆய்ந்ததும்
சால்புடையோர் செவியுற்றும்
சிலபல கேள்விகள் நிற்கின்றன
விடையற்று அனாதைகளாய்...

தத்துவங்களும் அனுபவங்களும்
தத்தளிக்கின்றன
விடைக்கு வித்தின்றி...

கடைநிலை பாமரனுக்கு மட்டுமல்ல
கடைத்தேறிய மேதாவிகளுக்குள்ளும்
கடை விரிக்கின்றன...
விடைதெரியா கேள்விகள்...

விடைதெரியா கேள்விகளுக்கு
விடை தராமலே
விடை பெறுமோ
நம்மிடம் வாழ்க்கை...

எழுதியவர் : Usharanikannabiran (28-Sep-19, 3:45 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 144

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே