கிருஷ்ணமூர்த்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கிருஷ்ணமூர்த்தி |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 16-May-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 707 |
புள்ளி | : 57 |
வெல்லும் வெறி கொண்ட வேடமிடும் மாந்தர்க்கு
சொல்லி, நெறி யுரைத்த நல்லோர் வாழியவே !
அள்ளும் மொழி பேசி, பெருவணிகன் கொழித்திடவே
புனைந்திட்ட கொடும் சட்டம் கொன்றோர் வாழியவே!
சுழன்றும் ஏர் பின்னியதென செப்பிடும் குறள்வழியே
உழன்று ஊருக்கு உணர்த்திய உழவோர் வாழியவே!
சுரண்டும் பெருநிறுவனத்தோர் விரித்த பெரும்வலையை
உணர்ந்து உயிரீந்து ஓரணியில் தகர்த்தோர் வாழியவே!
ஆதிக்க உணர்வோங்க எதேச்சதிகார எண்ணத்தோடு
வதைக்கும் ஆணவ சட்டங்கள் சிதைத்தோர் வாழியவே
எதிர்ப்போர் தம்மக்களை எதிரிபோல் திரித்துரைத்தும்
எள்ளியும் நகையாடியோர் வீழ்த்தியோர் வாழியவே!
அண்ணலின் அறப்போர்தம் புதுவடிவம் கண்டுநின்றோம்.
அதிகார மமதைதமை அடக்
எதையேனும் கூறினாலும், எவருக்கும் தெரியாது.
கதையென்று தள்ளிடாது, நிகழ்வுகள் சாட்சிகளாம்.
வூஹானில் உயிர் கொண்டதோ, வவ்வாலால் பரவியதோ
எவரெவரோ செப்பியதும், எதிலுண்மை அறிந்திலோமே?
உயிரியல் பேராயுதமா, உளவியல் ஒடுக்குமுறையா ?
மெய்யொன்றும் அறிந்திலோமே; மேதினியில் வெறும் ஓலம்.
அழகான அகிலத்தை அசைத்து பார்த்த நுண்வைரி .
கைதட்டி கதவடைத்தோம், விளக்குவைத்து வெளியில் நின்றோம் !
மருத்துவர்கள் கடவுளாக, அவர்மனையெலாம் கோயிலாக ,
கோவில்களும் பொலிவிழக்க, கல்விக்கூடங்களும் கதவடைக்க ,
உயிரற்ற ஒரு ஜந்து உலகத்தை உலுக்கியதே!
தீநுண்மியின் பெருந்தீமை திசையெட்டும் வசை பாடும்.
இருமல் சுரமென இயல்பாய் நுழைந்தி
உலகமனைத்தும் சமணம் ஏற்றது - ஒரே நாளில்
கொரோனாவால்! -முகவாய் மூடி
எஞ்சி இருக்கையிலே விஞ்சி ஓடினோம்
அஞ்சி நெருங்கையிலே மிஞ்சலையே - தடுப்பூசி
காடு வெட்டி நாடு கண்டோம் - இன்று
காற்று தேடி மூச்சு போகுது - ஆக்சிஜன்
கூடி பழகி குலாவச் சொன்னோம் -
ஒற்றுமை பேண -இன்று
கூடாது விலகி வாழ செய்கிறோம்
கொரோனவிலிருந்து காக்க
தேகம் நலிவுற்றார் நலம் விழைய
அகம் புகுந்து விளிப்பதுண்டு- அன்று
கதவு ஜன்னல் தாழிட்டதுமன்றி
காத தூரம் கதற ஓடவும் விட்டதே
பரந்து விரிந்த வானை பாரீர்;
பலகோடி பறவைகள் பறப்பதை.
திரிந்து அலைந்து இரை தேடி,
ஒருகோடி முதல் வானின் மறு கோடி வரை.
மரிப்பதில்லை, மாலையில் மறையும் கதிர்;
இரவைக்கண்டு இறப்பதுவுமில்லை;
மீண்டெழுந்து பொசுக்கும் வெறியால்
மறுநாள் காலை சுட்டெரிக்கும் ஒளியால்.
நிற்பதில்லை, மூலையில் அசையும் காற்று;
நெடி துயர்ந்த மரம் மலை பாராது
விரிந்தகன்ற வான் வெளி காணாது
சிலிர்த்தெழுந்தே சீறும் பெரும்புயலாய்.
பரந்து விரிந்த வானை பாரீர்;
பலகோடி பறவைகள் பறப்பதை.
திரிந்து அலைந்து இரை தேடி
ஒருகோடி முதல் வானின் மறு கோடி வரை.
தகிப்பதில்லை, காலையில் ஒளியும் நிலவு;
பகலைக்கண்டு மிரள்வதுவுமில்லை;
சகித்துக்கொண்டே பொறுத்த
உலகை உருவாக்கிய நும்பங்கு ஊரறியும்;
சிலவை சொல் கேட்டு சிந்தை சுணங்காதீர்.
பாரதியின் புதுமை பெண் பாங்காய் நடப்பீரே!
பாவிதம் புழுக்கத்தை காணாது கடப்பீரே!
சங்கதமிழ் கண்டெடுத்த சிங்க பெண்ணவள் நீ!
வங்ககடல் ஆண்டவர்தம் தங்கத்தமிழ் மகள் நீ!
இலக்கியம் வென்றெடுத்த எங்களின் எழிலாள் நீ!
உலகையே பெற்றெடுக்கும் கங்கையின் ஒப்பாள் நீ!
இளங்கோ படைத்திட்ட கோபக்கண்ணகியும் நீ!
துலங்கும் எழில் வடியும் கலை மாதவிமகளும் நீ!
ஆத்திச்சூடி நல்கிட்ட தமிழ்பாட்டி அவ்வையும் நீ!
எத்திக்கும் தித்திக்கும் திருப்பாவை கோதை நீ!
உலகை உருவாக்கிய நும்பங்கு ஊரறியும்;
சிலவை சொல் கேட்டு சிந்தை சுணங்காதீர்.
பாரதியின் புதுமை பெண் பாங்க
உலகை உருவாக்கிய நும்பங்கு ஊரறியும்;
சிலவை சொல் கேட்டு சிந்தை சுணங்காதீர்.
பாரதியின் புதுமை பெண் பாங்காய் நடப்பீரே!
பாவிதம் புழுக்கத்தை காணாது கடப்பீரே!
சங்கதமிழ் கண்டெடுத்த சிங்க பெண்ணவள் நீ!
வங்ககடல் ஆண்டவர்தம் தங்கத்தமிழ் மகள் நீ!
இலக்கியம் வென்றெடுத்த எங்களின் எழிலாள் நீ!
உலகையே பெற்றெடுக்கும் கங்கையின் ஒப்பாள் நீ!
இளங்கோ படைத்திட்ட கோபக்கண்ணகியும் நீ!
துலங்கும் எழில் வடியும் கலை மாதவிமகளும் நீ!
ஆத்திச்சூடி நல்கிட்ட தமிழ்பாட்டி அவ்வையும் நீ!
எத்திக்கும் தித்திக்கும் திருப்பாவை கோதை நீ!
உலகை உருவாக்கிய நும்பங்கு ஊரறியும்;
சிலவை சொல் கேட்டு சிந்தை சுணங்காதீர்.
பாரதியின் புதுமை பெண் பாங்க
உலகை உருவாக்கிய நும்பங்கு ஊரறியும்;
சிலவை சொல் கேட்டு சிந்தை சுணங்காதீர்.
பாரதியின் புதுமை பெண் பாங்காய் நடப்பீரே!
பாவிதம் புழுக்கத்தை காணாது கடப்பீரே!
சங்கதமிழ் கண்டெடுத்த சிங்க பெண்ணவள் நீ!
வங்ககடல் ஆண்டவர்தம் தங்கத்தமிழ் மகள் நீ!
இலக்கியம் வென்றெடுத்த எங்களின் எழிலாள் நீ!
உலகையே பெற்றெடுக்கும் கங்கையின் ஒப்பாள் நீ!
இளங்கோ படைத்திட்ட கோபக்கண்ணகியும் நீ!
துலங்கும் எழில் வடியும் கலை மாதவிமகளும் நீ!
ஆத்திச்சூடி நல்கிட்ட தமிழ்பாட்டி அவ்வையும் நீ!
எத்திக்கும் தித்திக்கும் திருப்பாவை கோதை நீ!
உலகை உருவாக்கிய நும்பங்கு ஊரறியும்;
சிலவை சொல் கேட்டு சிந்தை சுணங்காதீர்.
பாரதியின் புதுமை பெண் பாங்க
ஆண்டொன்று கழிந்தது.
மீண்டென்று வருவாரோ?
உணர்வுந்தும் மனம்தனிலே
வெற்றிடம் கலையாதோ?
மாண்டவர்தம் மரிப்பதில்லை
மக்கள் மனதில் வாழ்வதனால்,
கனவாகி போகுமென்று
நித்தம் நித்தம் நினைத்ததுண்டு.
மெய்கொண்ட வாழ்வுமட்டும்
மெய்யென்று நினைப்பதனால்,
உய்வெய்தும் வாழ்வொன்று
வானுலகில் உணர்ந்தோமிலை!
செய்திட்ட அருஞ்செயலை
அன்றாடம் அசைபோட்டே
பொய்யுலகை பெரும்பேறாய்
போற்றிப் பேணுகிறோம்.
சென்றோர்கள் வந்ததில்லை
வந்தோர்களும் நிலைப்பதில்லை
இறப்பெனும் நிலையொன்றே
நீங்காது நிலைத்ததொன்றே.
என்றெல்லாம் உரை பகன்றே
உணர்வொன்றும் மறைந்திடாதே.
சிறப்பாக வாழ்ந்தாரை
சிந்தையேந்தி வணங்கிடுவோம்.
வாழ்த்துக்கள் வேண்டி
வணங்கியேத்தும் அன்
வரலாற்றுப் பக்கங்களை யாருமே புரட்டாதீர்கள். கல்லறைச் சிலுவைகள் ஆயுதங்கள் ஏந்தக்கூடும். முள்ளிவாய்க்கால் ஓநாய்கள் பிணங்களை உண்ணுகின்றது. மனிதமுள்ள உள்ளங்கள் குப்பைக்குள் கிடக்கின்றது. வாழ்வாதாரப் பள்ளிக்கூடத்தில் புத்தகப்பைகள் களவாடப்பட்டது. உரிமைக்கான மனுக்கடிதத்தில் சைனட் குப்பிகள் தொண்டைக்குள் வன்முறையாய் வீசப்பட்டது. வெண் கட்டி வாங்கப் போன கைகள் வெட்ட வெளியில் மாயனமானது. பூக்காரியின் கூடைக்குள் விதவையின் கூந்தல் வெள்ளந்தியாய் சிரிக்கின்றது. துளசிச் செடிக்கு இரத்தத்தால் நீர் தொளித்தார்கள்; அண்ணனைக் கொன்று தங்கையின் கற்பை ருசி பார்த்தார்கள்; கைக்குழந்தையின் பால்வாடை அன்னையை அடையாளம் காட்டியது
எண்ணும் எழுத்தும் கண்ணென்றார் வள்ளுவர்!
ஏழையும் கல்விக்கண் பெற
வழியானார் காமராஜர்!
பசிப்பிணி நீக்கலே அறம்
என்றார் வள்ளலார்!
சத்துணவளித்து அவ்வழி
நின்றார் காமராஜர்!
வரப்புயர நீர் உயரும்
அறிவுறுத்தினார் ஔவையார்!
அணைகள் கட்டி நீர்வளம்
உயர்த்தியவர் காமராஜர்!
அறிவில் கரைகண்டோர் ஆட்சிகளில்
ஆங்காங்கு கறை உண்டு!
அறவழிஆட்சி செய்தோர்
இவர் போல யாருண்டு??
உள்ளொன்று நினைப்பார், புறமொன்று உரைப்பார்.
நன்றொன்று நடப்பதாய் ஊடகத்தால் குரைப்பார்.
அன்றன்று உறும் அல்லல் அருமதியை மறைக்கும்
வென்றொழித்து வாட வெறும் சட்டம் புனைவார்,
கல்லென்று நினையாது கடவுளாய் உணர்வோர்.
பகல்வேஷம் புரியாது பகல்கனவில் மடிவர்.
நில்லென்று உரைப்போரும் கள்வரென்று நம்பாரே!
நிகழ்காலம் நொந்ததன்றி எதிர்காலமும் வெந்துபோகும்.
என்றென்றும் சிறப்பதற்கு எல்லோரும் சிரிப்பதற்கு,
நல்லோர்கள் உருவாக்க, நல்லாசிரியர் கருவாக,
நன்றென்றும் நடப்பதற்கு நல்லவிதி பிறக்கட்டும்.
எல்லோரும் நலமுறவே, வல்லோர்கள் வீழட்டும்.
வாழிய பாரதம் வென்றென்றும், வளர்க தமிழகம் என்றென்றும்.
ஈரடியில் பேரொளியாம் ஏற்றுமொளி
திருக்குறள்.
ஏட்டுச்சுவடி ஏற்றிய சுடரொளி
ஆத்திசூடி
அறம்பொருளின்பம் திறம் உரைக்கும்
கம்பராமாயணம்
தேவரும் கனிந்துருகும் தேனமுது
தேவாரம்.
பெரும்வாசமாய் மனம் வீசும் ஒரு யாசகம்
திருவாசகம்.
ஐம்பெரும் காப்பியங்களாம் அருந்தமிழின்
பெரும்பாக்கியங்களாம்
திவ்விய தேவனுக்கு பாவாயிரம்
நாலாயிரம்.
பிற தேசரும் தேன் தமிழ்பாட தித்திக்கும்
தேம்பாவணி
மதம்தாண்டிய மொழியெமது என உணர்த்தும்
சீறாப்புராணம்
தமிழன்னையின் அணிகலன்தாம்
தரணி நடத்தும் வழி கலம்தாம்