பெண்ணின் பெருமை வீட்டில் அலுவலகத்தில்அனைத்து இடங்களிலும் பெண்டிர் படும் அல்லலை எதிர்த்து போராடும் பெண்மையை போற்றும் பாடல்

உலகை உருவாக்கிய நும்பங்கு ஊரறியும்;
சிலவை சொல் கேட்டு சிந்தை சுணங்காதீர்.
பாரதியின் புதுமை பெண் பாங்காய் நடப்பீரே!
பாவிதம் புழுக்கத்தை காணாது கடப்பீரே!
சங்கதமிழ் கண்டெடுத்த சிங்க பெண்ணவள் நீ!
வங்ககடல் ஆண்டவர்தம் தங்கத்தமிழ் மகள் நீ!
இலக்கியம் வென்றெடுத்த எங்களின் எழிலாள் நீ!
உலகையே பெற்றெடுக்கும் கங்கையின் ஒப்பாள் நீ!
இளங்கோ படைத்திட்ட கோபக்கண்ணகியும் நீ!
துலங்கும் எழில் வடியும் கலை மாதவிமகளும் நீ!
ஆத்திச்சூடி நல்கிட்ட தமிழ்பாட்டி அவ்வையும் நீ!
எத்திக்கும் தித்திக்கும் திருப்பாவை கோதை நீ!

உலகை உருவாக்கிய நும்பங்கு ஊரறியும்;
சிலவை சொல் கேட்டு சிந்தை சுணங்காதீர்.
பாரதியின் புதுமை பெண் பாங்காய் நடப்பீரே!
பாவிதம் புழுக்கத்தை காணாது கடப்பீரே!
அம்மையப்பனுக்கு அம்மையான புனிதவதிதாய் நீ!
கம்பன் வடித்துரைத்த காவிய சீதையும் நீ!
வில்லியார் வரைந்துரைத்த அல்லி பாஞ்சாலி நீ!
எள்ளிநகை எதிரிகளை சொல்லி அடித்த வேலுநாச்சியும் நீ!
சிவாஜி உருவாக அவர்தாய் ஜிஜா கருவானார்
காந்தி அண்ணலாகஅன்னை புதலி வேறானார்.
பாரதம் புனைவதற்கு பாஞ்சாலி பலியானார்.
பார் புகழ் எடிசனெழ அவ்ர் தாய் விதையானார்
உலகை உருவாக்கிய நும்பங்கு ஊரறியும்
சிலவை சொல் கேட்டு சிந்தை சுணங்காதீர்.
பாரதியின் புதுமை பெண் பாங்காய் நடப்பீரே
பாவிதம் புழுக்கத்தை காணாது கடப்பீரே
பேதையாய் பேசி பெற்றோரை வெல்வீரே
பெதும்பை பருவத்திலே மற்றோரை கொள்வீரே
மங்கை மடந்தையாய் அறிவில் செழிப்பீரே
அரிவை ஆகுங்கள் அவனியும் ஆர்ப்பரிக்கும்
தெரிவை யாகுங்கால் தரணியின் தெய்வமாம்
தெரியாதோர் வெட்கிடவே பெருமுரசு கொட்டிடுவோம்
பெண்டிர் புரியும் பணி ஆடவர் உணராரோ?
கண்டும் காணாராய் கடந்து செல்வாரோ?

உலகை உருவாக்கிய நும்பங்கு ஊரறியும்
சிலவை சொல் கேட்டு சிந்தை சுணங்காதீர்.
பாரதியின் புதுமை பெண் பாங்காய் நடப்பீரே
பாவிதம் புழுக்கத்தை காணாது கடப்பீரே
மகளின் பிரியமது மரணத்தில் விளங்கிவிடும்
தமக்கையின் பேரன்பு பின்னாளில் புரிந்துவிடும்
மனைவியின் அருமையவள் பிரிவில் வதைத்துவிடும்
அன்னையின் பெருமையது அகிலமும் கொள்ளாது!
நேரிய வாழ்க்கை கொண்டால் நிறைவு தேடிவரும்.
வீணர்கள் இகழுரையை விளக்கி விரைவீரே!
சீரிய கொள்கையென்றால் சிங்கநடை போட்டிடலாம்.
ஊனர்கள் வெட்கி நாண உளத்தூய்மை உரைப்பீரே!

எழுதியவர் : து.கிருஷ்ணமூர்த்தி (10-Jun-21, 6:28 pm)
பார்வை : 190

மேலே