தமிழ்த்திரு மாதங்கள்
சித்திரையில் புகுந்தாய்,
நித்திரையைக் களைத்தாய்,
இந்திர விழா வடித்தாய்.
வந்தாள் வைகாசி,
வரவும் தந்தாள்.
வையகம் வாழ்திட,
எடுத்தான் தமிழன்,
முருகக்கடவுளுக்கு
விழாவும் கூடி.
ஆனியும் வந்தாள்,
நீண்ட பகலைத்தந்தாள்,
வெடித்த வெயிலை விட்டுவிட வந்தாள்,
எடுத்தான் தமிழன் சிவனுக்கு
விழாவை.
அடித்தாய் ஆடியில்;
காற்றாய் மிதந்து,
அம்மியும் நகர்ந்தது
அடித்த காற்றில்.
அம்மனின் தரிசனம்,
ஆனந்த குதூகலம்
நித்தமும் தேவியின் கோயில்களில்,
களைகட்டடும்
இழுத்தாய் ஈரக்காற்றை,
வடித்தாய் சாரல் காற்றை,
தென்மேற்கு காற்றும் தென்றலை வீசியது.
குடித்த நீரை குடகு மலையில் கொட்டியும் தீர்த்தது.
ஆவணியும் பிறந்தது,
அறிவைத்தந்தது.
மாதங்களின் அரசன்,
மயக்கிய புருசன்,
சிவனின் சிறுதாண்டவம்,
சிந்தையில் வந்தது.
புரட்டாசி
புரட்டிய ராசி,
வருடத்தின் பாதி வந்ததே மீதி,
வெடித்த பூமியை,
நனைத்திட வந்த ராசி,
காதலர்களை பிரித்ததே இந்த ராசி,
எங்கும் தள்ளுதடி,
ஆடியின் தள்ளுபடி,
புது மாப்பிள்ளையை தள்ளியேபிடி
ஐப்பசியும் வந்தாள்,
ஊர்ப்பசியைத்தீர்க்க,
அடை மழையைத்தந்தாள்.
ஆயிரம் உயிர்களை காக்க.
நனைந்த மாதம்,
விருந்து படைத்தாள்;
இரவையும் பகலையும் தேய்த்து,
வான வேடிக்கை,
வண்ண வண்ண ஆடைகள்,
வந்த பலகாரம் என்று,
வகை வகையாக விருந்தும் உண்டு புதுமாப்பிள்ளைக்கு.
கார்த்திகை குயில் இவள்,
பூத்தே குழுங்கி,
புதைந்தாள் மனதில்,
வதைத்தே வந்து வரவும் தந்தாள்,
கார்த்திகை தீபமாய் எரிந்தாள்.
மனதில் நின்ற மார்கழி;
மயங்கினாலே பனியைப்போர்த்தி பதைத்திட்;ட பைங்கிளி,
மார்கழித்திங்கள் இவள்,
வந்தது பனியில் அல்லவா!
வதைத்தது குளிரல்லவா!
வடித்ததோ காதல் அல்லவா!
வரைந்தோ கோலமல்லவா!
விதைத்ததோ உறவை அல்லவா!
விடுத்ததோ விரகத்தீயல்லவா!
தைத்த தையோ;
தவழ்திட்ட மையோ;
வதைத்ததையா;
வந்தவளும் தையோ;
இனித்ததையா கரும்பையும் தின்று,
விழித்ததையா,
விழா எடுத்தே
தழைத்ததையா தமிழனின் பெருமை.
உதித்த தையா சூரியனுக்கு விழாவெடுத்து,
மதித்த தையா விலங்குகளுக்கு விழா எடுத்து.
ஜல்லிக்கட்டும் உரிக்கட்டும்,
உவகைக் கூத்து,
கன்னியரின் கூத்து,
கண்டிட பார்த்து;
கழவும் போனதோ;
கம்பனின் காதல் கூத்து.
எடுத்தாயோ திருவள்ளுவருக்கும் விழா,
எதைத்தான் சொல்வேன்,
ஏங்குது மனமே.
மாசி மாதம்
மகத்தான மாதம்,
மன்மதமாதம்,
மணந்திடவே உவந்த மாதம்.
பங்குனி
எங்களிடம் பழகு நீ,
வருடத்தை முடித்த நீ,
வடித்தாயோ காவியம் நீ,
விளையாடிட வந்தாயோ நீ,
விரட்டியும் விட்டாயோ
வாடிய குளிரை;
விதைத்தாயோ மலரைத்தூவி.