புகையிலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மருந்தை முறித்துவிடும் வாய்வறளச் செய்யுந்
திருந்து பலவீனஞ் சேர்க்கும் - பொருந்துபித்தம்
உண்டாக்கும் விந்தழிக்கும் ஓது புகையிலையைக்
கண்டார்க்கும் ஆகாது காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இது வாய்வறட்சி, கெட்ட நாற்றம், பித்தம், பலமின்மை, விந்தழிவு, மருந்து முறிவு இவற்றையுண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jun-21, 11:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே