கொரோனா
உலகமனைத்தும் சமணம் ஏற்றது - ஒரே நாளில்
கொரோனாவால்! -முகவாய் மூடி
எஞ்சி இருக்கையிலே விஞ்சி ஓடினோம்
அஞ்சி நெருங்கையிலே மிஞ்சலையே - தடுப்பூசி
காடு வெட்டி நாடு கண்டோம் - இன்று
காற்று தேடி மூச்சு போகுது - ஆக்சிஜன்
கூடி பழகி குலாவச் சொன்னோம் -
ஒற்றுமை பேண -இன்று
கூடாது விலகி வாழ செய்கிறோம்
கொரோனவிலிருந்து காக்க
தேகம் நலிவுற்றார் நலம் விழைய
அகம் புகுந்து விளிப்பதுண்டு- அன்று
கதவு ஜன்னல் தாழிட்டதுமன்றி
காத தூரம் கதற ஓடவும் விட்டதே