தாம்பிரபரணி நதிநீர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தாம்ரபர ணிப்புனலாற் சர்வசுரம் பித்துவிழித்
தூம்பிரமுட் காய்ச்சல் சுவாசநோய் - தேம்பிமிகக்
கக்குகய மென்புருக்கி கைகால் எரிவுடனே
மிக்குறுதா கங்களும்விள் போம்
- பதார்த்த குண சிந்தாமணி
இந்நீரைப் பருகினால் பலவிதமான சுரநோய்கள், பித்த தோடம், கண்புகைச்சல், உட்சுரம், சுவாசநோய், சயம், எலும்புருக்கி, கைகால் எரிவு, அதிதாகம் இவற்றைப் போக்கும்.