நல்லோர் வாழட்டும் - துகிருஷ்ணமூர்த்தி
உள்ளொன்று நினைப்பார், புறமொன்று உரைப்பார்.
நன்றொன்று நடப்பதாய் ஊடகத்தால் குரைப்பார்.
அன்றன்று உறும் அல்லல் அருமதியை மறைக்கும்
வென்றொழித்து வாட வெறும் சட்டம் புனைவார்,
கல்லென்று நினையாது கடவுளாய் உணர்வோர்.
பகல்வேஷம் புரியாது பகல்கனவில் மடிவர்.
நில்லென்று உரைப்போரும் கள்வரென்று நம்பாரே!
நிகழ்காலம் நொந்ததன்றி எதிர்காலமும் வெந்துபோகும்.
என்றென்றும் சிறப்பதற்கு எல்லோரும் சிரிப்பதற்கு,
நல்லோர்கள் உருவாக்க, நல்லாசிரியர் கருவாக,
நன்றென்றும் நடப்பதற்கு நல்லவிதி பிறக்கட்டும்.
எல்லோரும் நலமுறவே, வல்லோர்கள் வீழட்டும்.
வாழிய பாரதம் வென்றென்றும், வளர்க தமிழகம் என்றென்றும்.