தமிழன்னையின் அணிகலன்கள்
ஈரடியில் பேரொளியாம் ஏற்றுமொளி
திருக்குறள்.
ஏட்டுச்சுவடி ஏற்றிய சுடரொளி
ஆத்திசூடி
அறம்பொருளின்பம் திறம் உரைக்கும்
கம்பராமாயணம்
தேவரும் கனிந்துருகும் தேனமுது
தேவாரம்.
பெரும்வாசமாய் மனம் வீசும் ஒரு யாசகம்
திருவாசகம்.
ஐம்பெரும் காப்பியங்களாம் அருந்தமிழின்
பெரும்பாக்கியங்களாம்
திவ்விய தேவனுக்கு பாவாயிரம்
நாலாயிரம்.
பிற தேசரும் தேன் தமிழ்பாட தித்திக்கும்
தேம்பாவணி
மதம்தாண்டிய மொழியெமது என உணர்த்தும்
சீறாப்புராணம்
தமிழன்னையின் அணிகலன்தாம்
தரணி நடத்தும் வழி கலம்தாம்