தமிழ்ப்பற்று

தமிழ்ப்பற்று...

அறிவென்னும் சுடரை ஏற்றி வைத்தது...

ஆழமான உண்மைகளைப் புரிய வைத்தது..

இன்பம் தரும் வாழ்வியலைக் கற்றுத் தந்தது..

ஈகைத் தன்மையைப் பெருகச் செய்தது...

உலகம்போற்றும் தமிழை உயிராக்கித் தந்தது...

ஊரெல்லாம் போற்றும்படி உழைக்கச் சொன்னது....

எல்லாம் மாயை என்று எதார்த்தம் சொன்னது...

ஏட்டுப் படிப்போடு திருப்திகொள்ள வேண்டாம் என்றது...

ஐயமிட்டு உண்பதே சிறப்பெனச் சொல்லித் தந்தது...

ஒண்டியாக வாழ்வது கடினம் என்றது...

ஓய்வை நாடி புத்துணர்ச்சி பெறச் சொன்னது...

ஒளவை சொன்ன ஆத்திச்சூடியில் வாழ்க்கையை கற்பித்தது....

எழுதியவர் : ஜான் (17-Aug-18, 9:20 am)
பார்வை : 1506

மேலே