தவிர்ப்பு

தவிர்ப்பு
எல்லோரையும்
கண் கொண்டு கண்டாய்
எனைத் தவிர்த்து...
எல்லோரிடமும்
முகம் கொடுத்து பேசினாய்
எனை தவிர்த்து...
எல்லோரிடமும்
இனிமை பொங்க பழகினாய்
எனை தவிர்த்து...
ஓ !தவிர்த்தல் ஒரு மொழியோ?
உன்னில் நான் உயிர்த்தல் சொல்ல...