எது வாழ்க்கை

அழகான குடும்பத்தில்
அவதரித்தால் அதுவாழ்க்கை
அன்பான அம்மாவை
அனுசரித்தால் அதுவாழ்க்கை

ஆயுளுக்கும் அப்பாவை
புரிந்திருந்தால் அதுவாழ்க்கை
அக்காள் தம்பியுடன்
இணைந்திருந்தால் அதுவாழ்க்கை

அன்புடனே இல்லாளை
அனணத்திருந்தால் அதுவாழ்க்கை
ஆபத்பாந்தவனாய் கரம்நீட்டி
மகிழ்ந்திருந்தால் அதுவாழ்க்கை

எளிமையிலும் எண்ணங்கள்
உயர்ந்திருந்தால் அதுவாழ்க்கை
ஏணிபோல் அனைவரையும்
ஏற்றிவிட்டால் அதுவாழ்க்கை

பொய்களை ஓட்டிவிட்டு
புத்தனானால் அதுவாழ்க்கை
எத்தனாக இல்லாமல்
ஏற்றம் கண்டால் அதுவாழ்க்கை

கடமையே கண்ணாகக்
கருதினால் அதுவாழ்க்கை
கற்கண்டு வார்த்தைமட்டும்
கதைத்திட்டால் அதுவாழ்க்கை

ஏழைகளை இரக்கத்துடன்
எதிர்கொண்டால் அதுவாழ்க்கை
எப்போதும் புன்னகையை
ஏற்றிருந்தால் அதுவாழ்க்கை

புரிதல்மிகு வாழ்வினையே
அடைந்திருந்தால் அதுவாழ்க்கை
பூமிமாதா மனங்குளிர
மரம் வளர்த்தல் அதுவாழ்க்கை

எழுதியவர் : திருமகள் மு (18-Feb-20, 10:44 pm)
பார்வை : 203

மேலே