தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா இரவி

தமிழ் - ஓர் அறிவியல் மொழி

- கவிஞர் இரா. இரவி

*****

தமிழை உச்சரித்தால் வாழ்நாள் கூடும்
தரணியில் ஆய்வாளர்கள் உரைக்கின்றனர்

எழுக்களின் ஓசையில் அறிவியல்
எடுத்துவிடும் மூச்சில் அறிவியல் உள்ளது

தமிழ் படித்த அறிஞர்கள் பலரும்
தன்னிகரில்லா பெருவாழ்வு வாழ்ந்தார்கள்

அறிவியல் புயல் அப்துல்கலாம் அவர்கள்
இராமேசுவரத்தில் தமிழ்வழியில் பயின்றவர்

பொக்ரானில் அணுகுண்டு வெடித்தவர்
பூமியே வியக்கும் குடியரசுத் தலைவர் ஆனவர்

சந்திரனில் தண்ணீர் உண்டு என்று
அறிவித்த தமிழர் மயில்சாமி அண்ணாத்துரை

கோவை அருகே உள்ள கோதவாடியில்
கொங்குதமிழில் ஆரம்பக்கல்வி பயின்றவர்

விண்வெளி அறிஞர் சிவன் அவர்கள்
வண்டமிழை அரசுப்பள்ளியில் பயின்றவர்

அறிவியல் மேதைகளை உருவாக்கிய தமிழ்
அறிவியல் மொழி என்பதில் ஐயமில்லை

உலகில் முதல் பிறந்த மொழியும் தமிழே
உலக மொழிகளின் தாய்மொழி தமிழே

உலகில் தமிழர் இல்லாத நாடே இல்லை
உலகில் தமிழ் ஒலிக்காத நாடும் இல்லை

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (28-Sep-24, 10:51 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 51

மேலே