ஊட்டிக் குளிர்காற்றாய் உள்ளத்தில் வீசிடுவாய்
தீட்டுகிறாய் சித்திரம் தித்திக் குமிதழில்
பாட்டினில் பாயுது பைந்தமிழ் தேனமுதாய்
ஊட்டிக் குளிர்காற்றாய் உள்ளத்தில் வீசிடுவாய்
வாட்டுவாய்மா லைவரா மல்
---- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
தீட்டுவாய் சித்திரம் தித்திக் குமிதழிலே
பாட்டினில் பாயுமே தமிழ்ப்பா தேனமுதாய்
ஊட்டியின் குளிரென உள்ளம் தனில்வீசி
வாட்டிடு வாயெனை மாலை வராமல்நீ
---விளம் விளம் மா காய் அனைத்து அடிகளிலும்
அமையப் பெற்ற கலிவிருத்தம்
தீட்டுகிறாய் சித்திரம் தித்திக் குமிதழில்கன் னம்குழிய
பாட்டினில் பாயுது பைந்தமிழ் தேனமுத ஓடையாய்
ஊட்டிக் குளிர்காற்றாய் உள்ளத்தில் வீசிடுவாய் என்னுயிரே
வாட்டுவாய்மா லைவரா மல்தனிமை யிலென்னை விட்டுவிட்டு
----ஐஞ்சீரில் அமைந்த கலித்துறை