சிந்தனையில் சின்ன நரைமுடி
கூத்தாடும் கூறான உயிர்
மரண தரையில் வழுக்கி
விழும்போது சிந்தனைகள்
தாய்ப்பால் கேட்கிறது...
இளமையான மனித சுவரில்
முதுமை பாசிகள் அடர்ந்து பூத்து...
இடிந்து விழ நிற்கும் போது
சிந்தனைகள் உரோமக் கண்ணீறாகிறது..
கட்டடத்திற்கு முட்டை கண்வைத்து
படுக்கைக்கு பஞ்சுகள் கொட்டி
பணத்தோடு குளித்து வாழ்வோர்
நிம்மதி மழைக்கு வானம் பார்பதை
எண்ணி சிந்தனைகள் சிக்கி நிற்கிறது...
மனிதனில் மனித தோல்கள் கழன்று
மிருக கோடுகள் நிறமாவதை எண்ணி
சிந்தனைகளின் பற்கள் விழுகிறது...
(இஷான்)