அழகு

அன்னைப் பேரழகு!
ஆடும் மயிலழகு!
இளந்தளிர் அழகு!
ஈர்க்கும்பெண் பேரழகு!
உருகும் மெழுகழகு!
ஊதும் குழல் இசையழகு!
என்றும் தமிழழகு!
ஏங்கும் பாசமழகு!
ஐம்பூதங்கள் அழகு!
ஒற்றையடி பாதையழகு!
ஓடும் நதி பேரழகு!
ஔவை தமிழழகு!
அலைபாயும் கடலழகு!
சிப்பிக்குள் முத்தழகு!
சிரிக்கும் மலரழகு!
வலம்புரி சங்கழகு!
வான்நிலா பேரழகு!
மழலைக் குரலழகு!
மாலை இசை அழகு!
பெய்யும் மழை பேரழகு!
பேசும் கிளியழகு!
மலையருவி அழகு!
மாங்குயில் அழகு!
கவிதைக்கு பொய்யழகு!
காதலுக்கு மெய்யழகு!
உனக்குள் நான் அழகு!
எனக்குள் நீ அழகு!
நம் வாழ்வு பேரழகு!
நல்லிதயம் அழகு!

எழுதியவர் : திருமகள் (26-Feb-20, 5:56 pm)
சேர்த்தது : திருமகள்
பார்வை : 840

மேலே