இயற்கை

பொங்கும் எழிலாய் வந்தது வசந்தம்
புல்வெளியெல்லாம் பூத்துக் குலுங்கும்
மஞ்சள் சாமந்திப் பூக்கள் .....
புல்வெளிக்கு தங்கப் பட்டாடை உடுத்தி
மகிழ்கின்றாளோ இயற்கையன்னை

புல்வெளியை சார்ந்த மாமலை....
வானுயர ஓங்கி வளர்ந்த தேக்கும்
சந்தனமும் அகிலும் மூங்கிலும்
மரகதப் போர்வையால் மறைத்ததுபோல்இதம் தந்திட
மலையின் நடுவே ஓர்
மாபெரும் நீர்ச்சுனை..
அதிலிருந்து ப்ரவாகமாய்ப் பெருகி வரும்
நீர்......ஓர் அருவியாய் உருவெடுத்து
அருவி மகளாய் ஜல் ஜல் என்ற
சலங்கை ஒளி எழுப்பி
மலைச்சாரல் நோக்கி ஆடி ஓட
அங்கு இயற்கையாய் அமைந்த
லிங்கம் போன்ற கரும்பாறை மேல்
கங்கையாய் விழுந்தது அபிஷேகம் என

பக்கத்தில் மலர்ச்சோலையில்
பூத்து கிடந்தன மல்லியும் முல்லையும்
செண்பகமும் இன்னும் பாரிஜாதம்
ரோசா என்ற பூக்கள் ...... சோலையெல்லாம்
மணம்பரப்பி பூலோகத்தை தேவலோகமாக்கி
பார்க்கும் கண்களுக்கு.....

அதோ ஓடும் நதியின் இரு மருங்கும்
பச்சைக் கம்பளம் விரித்ததுபோல் காணும்
நெல் வயல்கள்......
அங்கு தங்கிய நீரில் துள்ளி விளையாடும்
கயல்கள் ...... நீண்ட நெற்கதிர்கள்
வீசும் தென்றலுக்கு சதிராட

அதோ காண்பது பழத்தோப்பு ....
மா பலா வாழை முதலாய பழங்கள்
காய்த்து குலுங்க ...... அதை விருந்தாக்க
வந்து திரண்ட குரங்கு கூட்டம்
பச்சைக் கிளிகள் ......
இன்பத்தில் மூழ்கிய குயில் கூட்டம்
கூவி இசை மாறி பொழிய
கூடும் மேகம் கண்டு வந்த மயில் கூட்டம்
தோகை விரித்து ஜதி சேர்க்க //////

இயற்கையில் நாம் காண்பதெல்லாம்
கண்ணுக்கு விரிந்து மனதிற்கு
இன்ப மயம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Feb-20, 3:03 pm)
Tanglish : iyarkai
பார்வை : 534

மேலே