கண்ணம்மா கண்ணம்மா

கண்ணம்மா கண்ணம்மா!
கவனித்தால் என்னம்மா?
காதலுக்கு ஏங்கிடும்
காதலனை பாரம்மா!

இராப்பகலாய் நிற்கிறேன்
ராணி உன்னை காணவே!
ராசாத்தியை காணாமல்
இரண்டு கண்கள் வாடுதே!

வாடும் கண்ணை பாரம்மா
வாசல் வந்து நில்லம்மா!
வாங்கிவந்த மலர்களை
வாடுமுன்னே சூடம்மா!

காத்திருந்து காத்திருந்து
கண்கள் இரண்டும் பூக்குதே!
பூத்திருந்து பூத்திருந்து
புத்திமுழுதும் நிறையுதே!

ஒரு வார்த்தை சொல்லம்மா!
ஓர் உயிரை வெல்லம்மா!
ஆண்டாயிரம் ஆனாலும்
உன்மனமாள்வேன் நானம்மா!

கண்ணுக்கு மணியாக
காத்துநிற்பேன் நாளுமே!
கவலைகள் நெருங்காமல்
பார்த்துக்கொள்வேன் நானுமே!

சிந்தாமணியே சிரியம்மா!
சிந்தையில் என்னை கொள்ளம்மா!
சீக்கிரமாக உன் பதிலை
சிரித்திடும் வண்ணம் சொல்லம்மா!

கண்ணம்மா கண்ணம்மா!
கவனித்தால் என்னம்மா?
காதலுக்கு ஏங்கிடும்
காதலனை பாரம்மா!

எழுதியவர் : திருமகள் மு (23-Feb-20, 10:59 pm)
Tanglish : kannamma kannamma
பார்வை : 258

புதிய படைப்புகள்

மேலே