திருநங்கைகள்

பருவ முட்டையில்
ஆண் கோது உடைந்து
பெண்மை கரு மனதில்
குலுங்குவது எங்கள் குற்றமா?ஐயா!

வீட்டிற்கு வெளியே
எறிந்த காற்செருப்பாகி விட்டோம்...
சமூக ஊசிகள் குத்தி விளையாடும்
பொம்மைகளாகி விட்டோம்...

வயிற்றை நனைக்க
துளிகள் தேடி நாக்கு வெட்டப்பட்டோம்...
திசைகள் கூனி கருத்து நிற்க
சிவப்பு விளக்கிற்குள் வெளிச்சமாகிவிட்டோம்....

பச்சிளம் குழந்தை கண்ணீர்
கக்கினால் தாய்ப்பால் விருந்தாகும்...
சில வருடங்களே பிறந்த பச்சிளம்
உணர்வுகள் உண்மை மென்றால்
வாழ்வே ஊமை ஆகுது ஐயா!






ஏன் கண்களால் வேடிக்கை ஊதுகிறீர்
ஏன் செவிக்குள் சாய்ந்து கொள்கிறீர்
ஏன் இழிப்பால் சுடுகல் கொட்டுகிறீர்
நாங்கள் ஊர்வலக் கூத்து அல்ல
இயல்பாக பார்த்து இனிப்பாக
இதழை இசை ஐயா! அது போதும்....

இயற்கை விட்ட எழுத்துப் பிழையான
வசனத்தை தட்டி மீண்டும் மீண்டும்
பொருள் கேட்பது நீதியின்
கடைசி வரியும் இல்லை ஐயா!

எங்கள் குறுதியின் உப்பும்
சிவப்புத்தான் ஐயா!
எங்கள் சிறை அன்பும்
மெழுகு தான் ஐயா!
எங்கள் மேட்டிலும்
கனவுகள் ஏறும் ஐயா!
எங்கள் கண்களிலும்
கண்ணீர் மேயும் ஐயா!

சொல்ல வேண்டும் அடித்து மீண்டும்
மீண்டும் அடித்து உறுதி சொல்ல வேண்டும்
என் தொண்டை கிறுக்கல்களை
பத்திரிகையிலும் நீ பதிய வேண்டும் ஐயா!
(இஷான்)

எழுதியவர் : இஷான் (17-Feb-20, 11:09 pm)
சேர்த்தது : இஷான்
Tanglish : thirunangaikal
பார்வை : 77

மேலே