கைகொடுக்கும் நம்பிக்கை

துணையாய் நான் இருக்கேன்
துணிந்து நீ போராடு
தன்னப்பிக்கை உள்ளவரை
உன்னை வெல்ல இங்கு யாரு?

வீழ்ந்து நீ பார்க்கும் போது
சிறு கல்லும் பெருமலையாய் தெரியும்
எழுந்துதான் நின்று பாரு
அது கிடக்கும் உன் காலடியில்....

உன் சோம்பலை நீ முறிச்சு
தூரமாய் தூக்கி எறிஞ்சிபுட்டு
துணிந்து எழுந்து வாடா
வெற்றி பல காத்துக்கிடக்கு

துணையாய் நான் இருக்கேன்
துணிந்து நீயும் போராடு
தன்னப்பிக்கை உள்ளவரை
உன்னை வெல்ல இங்கு யாரு?

மனம் துணிஞ்சிட்டா எல்லாம் தூசிதான்
கண் விழித்துப்பார் எல்லாம் துரும்புதான்
இந்த உண்மை புரிஞ்சா நீயும் டான் தான்

ஓடிப்பாரு உலகம் பெருசு
தேடிப்பாரு கிடைக்கும் புதுசு

உனக்கு முன்னால் பலர் (யார்) இருந்தால் என்ன
உனக்குள்ளே தன்னம்பிக்கை மட்டும்
இருந்தால் போதும்
எதையும் எதிர்த்து வெல்லாம் இங்கு

உனக்குள்ளே நான் இருக்கும்வரை
வீழ்ந்தாலும் தினம் கைகொடுப்பேன்
தயங்காதே! சிறிதும் கலங்காதே!!

வலிமை என்பது எண்ணிக்கையில் இல்லை
உன் எண்ணங்களின் எழுச்சியில்தானே - வெற்றி இருக்கும்

என்னால் முடியும் என்றுதானே முயன்று பாரு
இரவு மறையும் பகல் தெரியும்
விரைந்து நீயும் கண் விழித்துபாரு
உண்மை புரியும் வெற்றி எல்லை தெரியும்!

தன்னம்பிக்கை தணல்
கிச்சாபாரதி

எழுதியவர் : கிச்சாபாரதி (17-Feb-20, 7:26 pm)
பார்வை : 260

மேலே