உயிரின் உருமாற்றம்
உயிரின் உருமாற்றம்
உற்சாகச் சுடர்
உன் மனமெல்லாம் உற்சாகக் கொடிபோல் எழுந்து வீசும்.
புது ஒளியெனப் பரந்து எங்கும் ஊடுருவும்.
கனவு மின்னல்கள்
மாறி மாறி நெற்றி விளக்காக
இருள் நீக்கி வெளிச்சம் பரப்பும்.
காற்றின் எழுச்சியாய் உதிரம் கொட்டி பறத்தல் கற்றிடு.
நதிபோல ஓடைகளோடு கலந்து பாய்ந்தோட கற்றிடு.
ஒவ்வொரு வேளையும் திருவிழாவாய் அணுகி,
ஒவ்வொரு கணத்தையும்
புதுமையாய் உணர்ந்து மகிழ்ந்திடு.
உன் பார்வையில் ஆச்சரியங்கள் ஒளிர்ந்தால்,
நீ உயிருடன் எழுந்திருப்பாய்.
உன் இதயத்தில் தொடுகருவாய் வேகமாய் அவைப் பாய்ந்தால்,
நீ வாழ்ந்திருப்பாய்.
மௌனத்தின் மர்மம் ஒரு உணர்வு. உதடுகளின் விளிம்பில் நின்று,
அது வெளிப்பட மறுக்கும்.
கண்களில்
ஒளியென ஒளிர்கின்ற ஒளிக்கீற்றாய்,
ஒரு கணத்தில் உன்னிடமும்,
மறு கணத்தில் என்னிடமும்,
சில சொற்களைத் தேடும்.
வார்த்தைகளாக வடிவெடுத்து,
உதடுகள்வரை ஊர்ந்து,
குரலில் பிணைந்து,
இனிய இசையாக ஒலிக்க விரும்பும்
வெறுமொரு உணர்வு.
நுண்ணிய அதிர்வு.
காற்றில் மிதக்கும் ஓசையற்ற வாசனைப் போல்
உனக்கும் எனக்கும் இடையே.
மனங்கள் அதை மறைக்க முயலும்.
இந்த மர்மம் எப்படியோ
நாளைய உலகத்தின் முன்னால்
வெளிச்சப்படும்.
உலகத்தின் விதி
வேதனையின் மேகம் சூழ்ந்தபோது,
துக்கத்தின் நிழல் நீளமிட்டபோது, கண்ணீர் புருவ வரம்பு தொடும்போது, தனிமையின் பயத்தில் இதயம் நடுங்கும்போது,
இதயத்திற்குச் சொல்கிறோம்.
நீ ஏன் அழுகிறாய் ? என்று
இந்த ஆழமான அமைதி,
காலத்தால் அனைவருக்கும் பகிர்ந்தவை.
சிறுசிறு துக்கங்கள்
அனைவரின் கதைகளிலும் உண்டு,
சில வெயில் காலங்கள்
அனைவரின் வாழ்விலும் இடம்பெற்றவை.
இதை நினைத்து
உன் கண்கள் வீணாகவே கண்ணீர் சொரிக்கின்றன.
ஒவ்வொரு தருணமும் புதிய பருவம்.
நீ ஏன் இந்த அரிய பருவங்களை இழக்கப் பார்க்கிறாய். இருக்கவிடு.
எனது இருப்பின் இசை
உருகிய நீல மணல்போல் ஒழுகும்
இக்காலம்,
ஆழ்ந்த நீலநிற மௌனத்தின்
திரைவிரிக்கின்றது.
விழித்துப் பார்த்தால்
இங்கு நிலமும் இல்லை,
ஆகாயமும் இல்லை,
சருகினின்று இசைக்கும் இலையொலி, சொல்லிப்போகும்
இங்கு நீயும் நானும் மட்டுமே என்று.
என் மூச்சின் ஓசை.
என் இதழ்களின் துடிப்பு.
என்னைச் சுற்றியிருக்கும் ஆழங்கள்.
இந்தத் தனிமை
இதெல்லாமே நான்தான்.
உயிருடனே, கனவுடனே, எதிர்ப்பார்ப்புடனே எத்தனை நாட்கள் நடமாடினேனோ இதெல்லாமே நான்தான்
பைராகி