கவலை தரும் கவிதை

மலையின் பாரம் மனதில்
சொல்லிட வில்லை எளிதில்
உடைகிறேன் நான் தனிமையில்
தேற்றுவார் இல்லை அருகினில்

வலிகளை உணரும் தருணம்
தாய்மடி மனம்தான் தேடும்
ஓரமாய் கண்ணீர் ஓடும் - விழிகள்
உறங்கிட எப்படி மூடும்

தீரும் கவலைகள் என்றே
முடீந்திடும் இரவுகள் இங்கே
உறங்கிடா விழிகளின் ஏக்கம்
சொல்லிட மொழிகள் எங்கே

மனம் வேண்டிடும் தாலாட்டு
ஆறுதலாய் ஒரு பாட்டு
மனம் தேடி தேடி அலைகிறதே
எந்தன் மனதின் நிலை அதுவே

எழுதியவர் : ருத்ரன் (23-Feb-25, 10:30 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 48

மேலே