உயிர்மெய்

யாதுமாகி நின்றையரே...
கைகள் கோர்த்த அந்த நொடி
எனைச் சூழ்ந்த உலகம்
இருண்டு போனதே...
இதயம் மட்டும் ஏனோ ஏனோ
ஒளி பிழம்பாய் ஆனதே ...
நிறை இழந்த என்னை
நீர்க்குமிழாய் உன் பாசம் ஈர்க்குதே ...
அணு அணுவாய் நிகழும்
வேதி மாற்றங்கள் ...
புது பாதை காட்டுதே..
கைக்கிளை அல்ல நான்,
உன் கைக்குள்ளேயே என்றும்தான்
என பார்வை பூட்டுதே..
ஹார்மோன் செய்யும்
வேலை தானோ
என்ற நினைப்பும்
வீணாய் போனதே..
தொல்காப்பியக் களவொழுக்கம்
பத்தும் சிறகாய் பூத்ததே...
செம்புலப் பெயல்நீர் போல
என் உயிர் நினதானதே...
என் கண்ணின் பாவை
என்றால் உன் பிம்பம் சுருங்குமன்றோ..
செம்புனல் நீ ஆனதால்
உயிர்மெய்யும் விரியுமன்றே..
சாதலே அஞ்சேன்...,
அஞ்சுவல் சாவேன்..
பிறப்பு பிறிதொன்றென ஆனால்
மறக்குவேனோ..இம் காதலை...
ஆதலால் இம்மையிலே
காதல் செய்வீர்...
வெல்வேனோ..வீழ்வேனோ..
எனும் வினை இல்லா
பரவு ஆற்றலே இக்காதல்
ஆதலால் தொடர்
காதல் செய்வீர்...

எழுதியவர் : மரு. பெ.செந்தில்குமார் (3-Mar-20, 7:03 pm)
சேர்த்தது : Senthilsamrat
Tanglish : uyirmey
பார்வை : 132

மேலே