கைபேசி

கற்றது கையளவு கல்லாதது உலகளவு
கற்றதும் கல்லாததும் என் உள்ளங்கை மேலளவு
மேசைமீதிருந்தாய் மடியின் மீதமர்ந்தாய்
கையகப்படுத்திய எனை உன்னகப்படுத்தி வென்றாய்
பேசி உறவு வளர்த்த எம் வாயதனில் பூட்டுடுத்தி
ஆள் காட்டி விரலைக்கொண்டு அதிகாரம் செய்ய வைத்தாய்
வீசி நடந்த கையின் விரலசைவில் மொழி பகிர்ந்து
தோல் கொடுக்கும் தோழர்களை நெடுந்தூரம் தொலையசச்செய்தாய்
தினம் மடியும் உனைக்காக்க உயிர் கொடுக்கும் தந்தையவன்
கணம் விடியும் நிலை தொட்டு உன் திரையில் தஞ்சமவன்
உன்வசமே மாந்தரிவர் மீள வழி அறியாரே
பின் வருமாம் சார்ந்த இளம் சந்ததியும் சரிந்தாரே
குருதி வேகம் கொண்ட இளஞ்சிங்கங்களின் மூளைத்திறன்
பருதி தோன்றி மறைந்த பின்பும் செவ்வகத்தின் மூளை தனில்
முடங்கினவே புதைந்ததுவே எழில் சிறக்கும் எதிர்காலம்
கனல் கொண்டு எரியும் மனம் கவிதை பாடி வசைகிறதே

எழுதியவர் : நசீர் (25-Mar-20, 7:21 am)
சேர்த்தது : Nasir Ahamed
Tanglish : kaipesi
பார்வை : 86

மேலே