வெயில்

உணவுச்சக்கரத்தின் உயிர் நாடி
கனவை மாய்த்து வந்தாய் எமைத்தேடி
ஞாயிறு திங்கள் வரிசை நியதி
திங்களைத்தீர்த்த ஞாயிறு தினம் விதி
இதமே துவக்கம் எரித்தே மயக்கம்
கருணையின் பரிசா மெய்க்கனிமம்
நீரின்றி வாடும் பசுமை உண்டு
தண்ணீரைத்தேடும் அச்சுமை இன்று
அறிவீனர் நாமாய் செய்த மடந்தை
பார் தேவையும் தீயாய் பெய்ய உடந்தை
மழலையின் வண்ணம் மாறாதிருக்குமோ
தொழிலியர்ப்பாவைகள் கன்னம் கருக்குமோ
இரை தேட படைப்புகள் வெளியே செல்லவே
பிறை தேடி வரும்வரை வீரியம் குறைத்திடு
இறைவனை விட்டு சொல்லச்சொல்லவா
பரிவிலா உன்னைத்தனியச்செய்யவே

எழுதியவர் : (25-Mar-20, 10:05 am)
சேர்த்தது : Nasir Ahamed
Tanglish : veyil
பார்வை : 69

மேலே