கொரோனா

கடவுச்சீட்டை கேட்டோமா
நுழைவுச்சான்று கேட்டோமா
மார்கழியில் மண் ஜனனம் கொண்ட
பிறப்புச்சான்றும் கேட்டோமா
கடமை அல்ல கடனும் அல்ல
கனிவாய் கரத்தில் அனைத்தோமே
முகத்தில் தழுவி முத்தம் பதித்து
ஈரிலை வீட்டில் குடி வைத்தோம்
நான் எனும் சொல்லை நாம் என மாற்றி
ஓரினமே எனும் உண்மையை சாட்டி
தனிமையில் எம்மை தள்ளியே எம்மின்
ஒருமையில் ஒற்றுமை ஓங்கச்செய்தாய்
இயற்கையை எல்லிய எம்மை அழிக்க
சேர்க்கையால் துள்ளிய ஆயுதம் நீயோ
உணர்ந்தோம் தவறின் எல்லையில் இன்று
இறைந்தோம் அவரவர் இல்லத்தில் நின்று
போதும் இத்தாண்டவம் புரிந்த இப்பொழுதுடன்
ஏதும் வேண்டாமெனும் இத்தேடல் எப்பொழுதுமே
பாடம் பயின்றோம் காணா உன் உருவிலே
வேடம் களைந்து வீழ்ந்திடு உன் அழிவிலே

எழுதியவர் : நசீர் (25-Mar-20, 6:34 am)
பார்வை : 264

மேலே