கொரோனா

கொரோனா
////////////////////////////////////////////////////////
தேடி வரும் கொரோனா
--தேடியே கொல்வதேனோ
தேடுற மானுடனை
---தெரியாமலே கொன்று
வெற்றியெதனை காண்கின்றாயோ ?
--சொல்லிவிட்டு கொல்வாயோ

ஆற்றல் உடைய
---அறிவுடைய மானுடனே
-அறிந்து கொள்ளும்
_அறிவும் இல்லாமலே
திணறித்தான் போகிறானே
---திருவருள் கொரோனா

வீணர்களை வீழ்த்திடத்
--விதியுண்டு மதியுண்டு
விடாமல் வாழ்ந்தவனையும்
----விழித்தியே சிரிக்கிறியே

காத்திடுவான் இறைவனென்றே
---காத்துநின்ற பக்தனையும்
காரணமின்றியே விழுத்தியே
---கற்பிப்பது என்னவோ ?

மனதில் வஞ்சனைக்கொண்டே
--மாயமான வாழ்வையும்
மரணத்தில் தள்ளியே
---மானிடனை ஆள்கின்றாய்

பொய்மையே உலகமேயென்று
---பொய்யுரைத்து தன்னிலையறியாமல்
பொய்யான உலகத்தில்
---பொல்லாப்பில் வீழ்ந்தவனையும்
உன்வராவால் நிறுத்தி
----உணரவைப்பது என்னவோ

கவிச்சுடர் அகிலன் ராஜா






-

எழுதியவர் : கவிச்சுடர் அகிலன் ராஜா (24-Mar-20, 11:44 am)
பார்வை : 96

மேலே