எழுசீர் சந்த விருத்தம்

நீல வான ஓடை மீது
நீந்து கின்ற வெண்ணிலா !
மாலை வந்து விடிய விடிய
மகிழ வைக்கு மன்பிலே !
கோல இரவு மீன்க ளோடு
கொஞ்சி யுறவு கொள்ளுமே !
காலை வரையி லாசை யோடு
கவிதை நூறு சொல்லுமே !

எழுசீர் சந்த விருத்தம்

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Mar-20, 2:34 am)
பார்வை : 60

மேலே