தழும்புகள்
உன் இளகிய மனதை
என் சொல்லால்
காயப்படுத்தி
விட்டேனடா ..
முட்களால் குத்திய
காயம் ஆறிவிடுமே
என் வாய்
சொற்களால்
குத்திய காயம்
ஆறிடுமோ ..
உன் மனம்
என் வார்த்தைகளால்
காயம் கண்டு விட்டதே ...
என் கண்ணீரால்
என்னை
நனைத்து கொண்டு
இருக்கிறேன் ..
எனக்கு நானே
தண்டனை கொடுத்து ..
மன்னித்து விடு
என் கண்ணாளனே
இனி ஒரு போதும்
என் சொல்
உன்னை ரணமாக்கிவிடாது ..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
