மீண்டும் ஒரு சந்திப்பு

(தான் காதலித்த பெண்ணை கணவன் மற்றும் குழந்தையுடன் சந்தித்த காதலனின் கண்ணீர் துளிகள் )
மீண்டும் ஒரு சந்திப்பு
நம்மிடையே இப்படி ஒரு சந்திப்பு நிச்சயம்
நிகழ்ந்திருக்க கூடாது தான்
என்ன செய்வது
எதிர் பார்க்கதவையும் நடக்க கூடாதவையும்
நிகழ்வது தானே வாழ்கை
இப்பொழுதும் கூட புரிகிறது எனக்கு
நலம் விசாரிக்கும் நோக்கோடு
நீ பார்க்கும் பார்வையின் பாஷைகள்
நான் நலமாகத்தான் இருக்கிறேன்
ஆனால் நிறைய மாறி இருக்கிறேன்
ஆம்
இப்பொழுதெல்லாம் யாரேனும் உன் பெயர் சொல்லி
அழைத்தால் நன் திரும்பி பார்ப்பதில்லை
கடற்கரை மணலில் உன் பெயரையும் என் பெயரையும்
சேர்த்து எழுதுவது இல்லை
இரவில் தனியே நிலவோடு பேசுவது இல்லை
என் வீட்டு கண்ணாடியில் உன் முகத்தை பார்ப்பதில்லை
என் அலைபேசி ஒழித்திரையில் உன்
புகைப்படம் வைப்பதில்லை
என்
மின்னஞ்சலில் உன் பெயர் இருப்பதில்லை
முகப்புத்தகத்தில் உன் பெயர்ப்பக்கத்தை
நன் தினமும் பார்ப்பதில்லை
இருந்தாலும் உன்னை நினைக்க மறப்பதில்லை
நீ மட்டுமே என்றிருந்த என் உலகம்
உன் நினைவு மட்டும் என்று சுருங்கி நிற்கின்றது
என்னை போலவே நீயும் நிறைய மாறி இருக்கலாம்
உன் கண்ணில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும்
என் கண்ணில் வற்றி போய் விட்ட கண்ணீரும்
நம் காதல் மேகங்கள் பொழிந்த மழையின் மிச்சமாய்
இதோ உனக்கானவனும் உன் குழந்தையும் அழைக்கின்றனர்
உன்னை
போய் வா இல்லை இல்லை போ
இது போல் மீண்டும் ஒரு சந்திப்பு நம்மிடையே வேண்டாம்
என இருவரும் வேண்டி கொள்வோம்

எழுதியவர் : கஜபதி (16-Feb-17, 10:00 am)
சேர்த்தது : கஜபதி
பார்வை : 430

மேலே