விடை தெரியா கேள்வி

எது அழகு
என்னவளே எப்படி சொல்வேன் இக்கேள்விக்கு பதிலை
விண்மீனை தோற்கடித்த உன்
விழிமீன் என்றா
மலரிதழ் தேனை தேடிய
வண்டு கண்டு மயங்கி
நிற்கும் உன்னிதழ் என்றா
காற்றோடு கூட்டு சேர்ந்து
உன் கன்னம் தீண்டி விளையாடும் உன் கூந்தலா
இல்லை அதனோடு போராடும் உன் மென் கை விரலா
உன் குரலே அழகென்று நான் சொன்னால்
அதுகேட்டு உன் செவிமடல் கோபித்து கொள்ளாதா
ஒருவேளை
உன் முகமே அழகென்றால்
தாமரை பாதத்தை மெல்லிடையை
என்னவென்று சொல்வது
நீயே அழகு என்று பொதுவாய் சொன்னாலும்
போட்டிக்கு அது முடிவை தந்திடுமா
கேள்விக்கு பதிலாய் அமைந்திடுமா
பல
விடை தெரியா கேள்விகள் போலே
இதுவும் விடை இன்றி போய் விடுமோ

எழுதியவர் : கஜபதி (11-Feb-17, 3:50 pm)
சேர்த்தது : கஜபதி
பார்வை : 179

மேலே