மெளனமான பெண்ணே

எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு

"கொடுத்த தலைப்பில்"

கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை..


மெளனமான பெண்ணே!


மெளனத்தின் வாசல்வழியே நித்தமென்னை..
கன்னத்தில் கைவைத்து அழைக்கின்றாய்!

வெறும் பார்வையொன்றே போதுமா?..
அதன் பார்வைக்குத்தான் என்ன அர்த்தம்?..

டாவின்ஸி ஓவியமே..நீயுன் மெளனம்துறந்தால்
துள்ளிவிளையாட என்மனம் இசைந்திடுமே! உன்னுடனே

மெளனச் செய்கையால் நீஎனை..மேலும்
மனநோயாளி ஆக்கிவிட்டாய்!

பார்வை யொன்றே பாங்காகத் தோன்றா தெப்போதும்!
சொல்லொன்றைச் சொன்னால்தான் சொந்தமாக முடியும்!

உத்தமியே உன்னழகைப் பார்த்தவுடன்..நான்
உன்மத்தம் ஆகி நின்றேன்..

எந்தன் உயிர் பிரியுமுன்னே..
உந்தன் மெளனம் கலைவாயா!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (11-Feb-17, 3:51 pm)
பார்வை : 453

மேலே