திமிர் பிடித்த பெண்ணே

எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு
"கொடுத்த தலைப்பில்"
கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை..
"திமிர் பிடித்த பெண்"
====================
திமிர் பிடித்த பெண்ணேநீ யெனைக்கொஞ்சம்
திரும்பிப்பார் கண்ணே!
உன்னழகுபற்றி உனக்கே தெரியவில்லை!
சொல்லுகின்றேன் செவிகொடுத்து கேள்பெண்ணே!
அழகென்று சொல்லி அலங்கோலமாக..
ஆடையணியும் அழகான பெண்ணே!
செயற்கையான தோற்றம் கொண்டால்..அதுன்
இயற்கையான எழிலழகைக் கெடுக்குமன்றோ!
இரட்டை முடி படியவாரி அழகூட்டுமுன்முகம்..
பரட்டை முடிவந்து இப்பஉன்னழகைக் கெடுக்குதடி
முத்தானமுடியெல்லாம் அலங்காரமென்ற பெயரில்நித்தம்
முடிதிருத்துமகமொன்றில் அலங்கோலப்படுவது அசிங்கமன்றோ
சிகையெங்கும்பிரித்துதறி சிகைப்பொடியின் மணம்பரவ
சிட்டாகநீ வந்தால், உன் அழகு கூடுமன்றோ
நீண்டகருங்கூந்தல்தான் பெண்டிருக்கு அழகென்றால்
நல்லகருங்கூந்தலை நறுக்கென்று நறுக்கியது நியாயமா
ஆடையுடை ஒப்பனைநகை யனைத்திலும்தான் கவர்ச்சியென்றால்
இயற்கை முடிதனை அதையுமதுவிட்டு வைக்கவில்லையே!
திமிராக நீயெனைப் பார்க்கும் பார்வையில் கூட..
புதிராகத் தோன்றிய என்காதலை பதிலாக வெளிப்படுத்துகிறேன்!