பெண்னின் வல்லினம் ,மழையின் மெல்லினம்

வலியவள் நீயாதலால்,மழையது தன்
வலிமையை உணர்த்த, தான் பொழிந்த
சாரலால் உன் கூந்தலை நனைக்க ,
நனைந்த கூந்தலின் அழகும் ,
காதோரம் அழகாய் படர்ந்த
சாரலின் அழகும் ,மழையின் வல்லினத்தை தகர்த்தது !!!
இடைவிடாது பெய்த மழையால் கூட
உன் தேகம் நனையாமல் பாதுகாத்த நான் ,
என் கண்கள் உன் இடையின் அழகால்
தன் கற்பை இழக்க ,
கற்பை இழந்த கண்கள்
வெட்கத்தால் கண்ணை மூட
மழையது உன் இடையினத்தையும் நனைத்தது !!!
மழையால் மேனி நனைந்ததால்
உன் மேனிக்கேற்ற ஆடையை தேர்வு
செய்யமுடியாமல் தவித்தது என் உள்ளம் ,
உன் மேனிக்கேற்ற ஆடைதான் யாதோ ??
பட்டினால் நெய்யப்பட்ட பட்டாடையோ !
கண்களால் கவரப்பட்ட கண்டாங்கி சேலையோ !
இல்லை இல்லை ,
உன், பால் மனம் மாறாத பாலாடையே
உன் மேனிக்கேற்ற ஆடையாகும் !!!
பாலாடையில் உன்னை பார்த்த பால்மேகம்
தன் அழகை மேலோங்கி காட்ட முற்பட்டு,
பால் போன்ற சாரலை அது பொழிய ,
பொழிந்த சாரல் அவள் கன்னத்தை வருட ,
போட்டி சமனில் முடிந்தது ,
அழகால் அழகை அடிப்பது இதுதானோ !!!!
--மதியழகன் --