பெண்களின் நடை உடை பாவனை

எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு
"கொடுத்த தலைப்பில்"
கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை..
"பெண்களின் நடை உடை பாவனை"
==================================
எழில்நங்கை எடுப்பாக முன்னே செல்லவள்..
அழகான ஒற்றைப் பின்னால் உறவாடுமுன் பின்னே!
பின்முதுகு முடியும்வரை மூடிமறைத்தழகால் - உன்
பின்னால் நான் வருவேன்உன் உடையழகுகண்டு!
கழுத்துக்குகீழே கணுவிரலலளவு தெரியாது..
ஒழுக்கமாக நீயுடுத்தும் உடைகண்டு..
கயவர்களின் கள்ளத்தனம் கொண்ட..
கடைக்கண் பார்வைகூட உன்மீது விழாது!
ஒழுங்கான உடையினிலே உன்னழகு..
ஒழுக்கத்தைக் கற்பிக்கும் எவர்க்கும்!
சிற்றிடை மெலிந்தாட சிக்கெனவருகையில் நீயேஎனைக்
கட்டியாள வந்தவள்போல் எண்ணுகிறேன்!
மேனியிலே வளைவுகாட்டி திரளழகுதெரிய..
தரையினிலே நீநடக்கும் ஒய்யாரம் கண்டவுடன்..
சீராக ஓடுகின்ற என்னிதயம்..
சிறிது நொடி நின்றுவிட்டு மறுபடி ஓடுமன்றோ!
நடையுடை பாவனையில் நாகரீகம் காட்டும்..
நற்சிந்தை கொண்டவளே நீதான் எனக்குகந்தவள்!