ஏனடி வஞ்சம்

தோட்டத்து பூக்கள்
உன்னை
பிடிக்கும் என்றது
பறித்துக் கொண்டாய் !

வீட்டில் இருந்த
கரு மையும்
உன்னை
பிடிக்கும் என்றது
தீட்டிக் கொண்டாய் !

பட்டு வண்ணசீலையும்
உன்னை
பிடிக்கும் என்றது
உடுத்திக் கொண்டாய் !

ஆழியில் இருந்த
முத்து மணியும்
உன்னை
பிடிக்கும் என்றது
அணிந்து கொண்டாய் !

கடைவீதியில் இருந்த
சலங்கை கொலுசும்
உன்னை
பிடிக்கும் என்றது
மாட்டிக் கொண்டாய் !

பித்தன் நானும்
உன்னை
பிடிக்கும் என்றேன்
முறைத்துக் கொண்டாய் !

ஏனடி இந்த
வஞ்சம் - நான்
என்றோ உன்னிடம்
தஞ்சம் !!!

எழுதியவர் : புகழ்விழி (27-Jun-16, 1:36 am)
Tanglish : aenadi vanjam
பார்வை : 282

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே