பழனிச்சாமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பழனிச்சாமி |
இடம் | : இராமநாதபுரம் |
பிறந்த தேதி | : 01-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 358 |
புள்ளி | : 157 |
அன்று நண்பர்களாய் அறிமுகம் ஆனோம்!
இன்று காதலராய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
நீ நண்பனாய் இருந்தவரைஎன் துக்கத்திலும், சந்தோசத்திலும்,வெற்றியிலும், தோல்வியிலும்என்னோடு இருந்தாய் -ஆனால்இப்பொழுதோ என் இதயத்தில்காதல் என்ற அமிர்தத்தை ஊற்றிவிட்டுசந்தேகம் என்ற விஷத்தை பாய்ச்சுகிறாய்!என் காதலே!
நீ என் உண்மையான அன்பைபுரிந்துகொள்ள முயற்சி செய்!சந்தேகம் என்ற விஷத்தால்நம் காதலை கொன்றுவிடாதே!...
அன்பே நீ இததான சொல்ல வந்தாய்நீ சொல்லாத வரிகளை நான் சொல்லிவிட்டேன்உனக்காக !!!
நான் உன்மீது கொண்டதுசந்தேகம் அல்ல உன் மீது கொண்ட அளவுக்குஅதிகமான பாசம் என்பது உனக்கு என்று புரியுமோ ???
இரவில் தூக்கம் இல்லை,
மனதில் நிம்மதி இல்லை,
முகத்தில் சந்தோசம் இல்லை,
உறவில் நிரந்தரம் இல்லை,
வாழ்கையில் இன்னும் எத்தனை
சோகங்களை காணுமோ எந்தன் நெஞ்சம்...
நீ என்னை மறக்க நினைக்கிறாய் !
ஆனால், நான் மறந்துவிட்டேன் ..
உன்னைத்தவிர அனைத்தையும் !
என்னை மறந்துவிட்டாயோ
என நினைத்தே
உன்னை மறக்க
முடியாமல் தவிக்கிறேன் !
உன் காதலை மறந்தாலும்,
என் காதலை மறக்க
முடியாது உன்னால் !
என்னை மறந்து ,
வேறு வாழ்க்கை
அமைத்துகொள் என்று
தூது விடுகிறாய் ..
தூது விடுவதற்கு
முன்பு நினைத்தாயா ?
நீ என்னை வேண்டாம்
என்று கூறியபோது,
உன்னிடம் நான் யாரையும்
தூது அனுப்பாததின்
காரணத்தை ????
நினைத்திருந்தால்,
கூறி இருக்க மாட்டாய்
மறந்து விடு என்று !
உன்னால் என்னிடம்
கூற முடியாது,
என் காதலை
அறிந்தவள் நீ !
நீ கூறினாலே
மறக்க மாட்டேன், இதில்
யாரோ ஒருவர் சொல்ல
பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க, அதில் புருஷனை வெறுத்து ஒதுக்கும் மனைவி டைவர்ஸூக்கு துணிகிறார். மனைவியின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து கணவரும் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் ஒரு நாள் தன் மனைவி தன் வசம் வருவார்… எனும் நம்பிக்கையில் காத்திருக்கிறார். கணவரின் நம்பிக்கை பலித்ததா? இல்லையா? என்பதே ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் மீதிக் கதை!
காலனே,
கொஞ்சம் பொறு!
கவிதை சொல்ல வேண்டும்!
இதுவரை யாரும்
எழுதாக் கவிதை!
இனிமேல் என்பேர்
சொல்லும் கவிதை,
அவகாசம் கொடு!...
மரணத்தை உணர்த்த
கவிதையால் சாத்தியமா?
மனதில் பலநாள்
எழுந்த கேள்வி!
இறந்து பார்க்காமல்
இறப்பைப் பாடிட
எவனால் முடியும்?!..
இறந்த பிறகு
ஏற்படும் அனுபவம்
எழுதிச் சொல்லவும்
சாத்தியமில்லை!
இறக்கும் தருணம்
மட்டுமே உள்ளது..
தள்ளி நில்!..
துளியில் துவங்கிக்
குழியில் முடியும்,
இடைபட்ட நேரம்
நடைபோட்ட தூரம்
கொண்டது,கொடுத்தது
உண்டது,உடுத்தியது
எல்லாம் விட்டுப்
போகும்போது..
ஏங்கவோ,எண்ணவோ
எதுவுமில்லை!...
இந்த உடல்தான்!
எத்தனை உணர்ச்சிகள்?
இந்
நான் பார்க்கும் போது
நீ தான் என் கண்கள் !!
நான் பேசும் போது
நீ தான் என் மௌனம் !!
நான் உறங்கும் போது
நீ தான் என் கனவு !!
நான் விழிக்கும் போது
நீ தான் என் விடியல் !!
நான் எழுதும் போது
நீ தான் என் கவிதை !!
நான் இருக்கும் வரை
நீ தான் என் புன்னகை !!
நான் இசைக்கும் போது
நீ தான் என் பாடல் !!!
நான் நடக்கும் போது
நீ தான் என் பாதை !!!
நான் நினைக்கும் போது
நீ தான் என் மனதில் !!!
நான் உயிர் வாழும் போது
நீ தான் என் சுவாசம் !!
கடைசி வரை நீ தான் எனக்கு எல்லாமே.....!!!
பிறக்கும் போது தனிமையின் கருவறை...
இறக்கும் போது அமைதியின் கல்லறை....
இடையில் மட்டும் ஏன் இத்தனை இதயம் வலிக்கும் உறவு முறை.....!!
ஒருபிடி சோற்றுக்கே வழியிலா
ஒற்றைநாடி உயிர்கள் போராடுது
கட்டுகளாய் பணத்தை அடுக்கி
மெத்தையாய் கொண்டு படுக்குது
உழைக்காமல் பிழைக்கும் கூட்டம் !
வரிசையில் நிற்கும் வறியோருக்கு
இல்லை அரிசியென உரைத்தவனே
கள்ளத்தனமாய் விற்கும் நிலையும்
பதுக்கி வைப்பவன் பாதுகாப்புடன்
பக்கத்து மாநிலத்திற்கு அனுப்பிடும்
அவலக்காட்சி அரங்கேறுது நாளும் !
நோட்டைக் கொடுத்து ஓட்டும் வாங்கி
வழங்கும் வாக்காளர் வாய்க்கு அரிசியும்
இல்லாமல் தவிக்கும் மயான பூமியிது !
ஏய்த்தே வாழும் கூட்டத்தின் ஆதிக்கம்
ஏமாளியாய் ஆக்குது ஏழை பாழைகளை !
சொந்தப் பணமோ செல்லாக் காசாகுது
பந்தப் பாசமோ கல்வெட்டுக் காலமாகுத
கனவுகள் சிதைந்த
நெஞ்சமொன்று
நூலறுந்த காற்றாடியாய்
குப்பையில் கிடக்கின்றது
கடலளவு ஆழமாய்
மெளனமாய் அழுகிறது
விண்ணளவு பாரமாய்
ஆசைகளை சுமக்கிறது
துப்பாக்கி ரவையில்
இமைகளை தொடுக்கிறது
விழிகளை இழந்து
தொடுவான் தேடுகின்றது
நரம்புகள் எங்கும்
முள்ளின் கிரீடங்கள்
திறமைகள் இன்றும்
பணத்தால் கற்பழிப்பு
விதிகளை நொந்து
விடையின்றி போனேன்
மதிகளை பார்த்து
குருடனாகி போனேன்
மாளிகைக் கட்டும்
மனிதனும் கல்லறையில்
சாக்கடை அள்ளும்
புனிதனும் கல்லறையில்
வாழ்க்கையை எண்ணி
கண்ணீர் வடித்தாலும்
உலகத்தோடு ஒட்டிச்
சிரிக்க விரும்பவில்லை
சின்ன சிறு வயதில் இந்த உலகம் அனாதை என்று துக்கி எறிந்த தருணம் பசியால் தவிக்கும் எனக்கு உன்ன உணவு தந்தாய்!
நீ தரும் உணவால் நான் யாரிடமும் கை ஏதுவதில்ல நீ வருவாய் என பள்ளியில் காத்திருப்பேன் அந்த தருணங்களே என்னால் மறக்க முடியல தோழி.....
இப்ப நான் நலமா இருக்கேன் உன்ன காண துடிக்கிறேன் காணவில்லை உன்னைபோல பெண்ணே இதுவரை பார்த்ததில்ல இ மிஸ் யு ...
என்னை புரிந்துக்கொள்ள உனக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும் அந்த ஜென்மமாவது என்னுடைய
புன்னகையை என்னிடமே விட்டுவிடு...!!!
காதலிக்க மட்டும் தான் செய்வாய் என நினைத்தேன்
ஆனால் என் கண்களின் ஓரத்தில் நீரையும் இதயத்தில் வலியையும் ஒன்றாய் புரிய வைத்தாய்... !
புரிந்தது காதலின் வலி எதிரிக்கு கூட வேண்டாம்
இந்த நரக வேதனை.... !