வலிகளும் மெலிதான பாதை --முஹம்மத் ஸர்பான்
கனவுகள் சிதைந்த
நெஞ்சமொன்று
நூலறுந்த காற்றாடியாய்
குப்பையில் கிடக்கின்றது
கடலளவு ஆழமாய்
மெளனமாய் அழுகிறது
விண்ணளவு பாரமாய்
ஆசைகளை சுமக்கிறது
துப்பாக்கி ரவையில்
இமைகளை தொடுக்கிறது
விழிகளை இழந்து
தொடுவான் தேடுகின்றது
நரம்புகள் எங்கும்
முள்ளின் கிரீடங்கள்
திறமைகள் இன்றும்
பணத்தால் கற்பழிப்பு
விதிகளை நொந்து
விடையின்றி போனேன்
மதிகளை பார்த்து
குருடனாகி போனேன்
மாளிகைக் கட்டும்
மனிதனும் கல்லறையில்
சாக்கடை அள்ளும்
புனிதனும் கல்லறையில்
வாழ்க்கையை எண்ணி
கண்ணீர் வடித்தாலும்
உலகத்தோடு ஒட்டிச்
சிரிக்க விரும்பவில்லை