காதல்

நீ என்னை மறக்க நினைக்கிறாய் !
ஆனால், நான் மறந்துவிட்டேன் ..
உன்னைத்தவிர அனைத்தையும் !
என்னை மறந்துவிட்டாயோ
என நினைத்தே
உன்னை மறக்க
முடியாமல் தவிக்கிறேன் !
உன் காதலை மறந்தாலும்,
என் காதலை மறக்க
முடியாது உன்னால் !
என்னை மறந்து ,
வேறு வாழ்க்கை
அமைத்துகொள் என்று
தூது விடுகிறாய் ..
தூது விடுவதற்கு
முன்பு நினைத்தாயா ?
நீ என்னை வேண்டாம்
என்று கூறியபோது,
உன்னிடம் நான் யாரையும்
தூது அனுப்பாததின்
காரணத்தை ????
நினைத்திருந்தால்,
கூறி இருக்க மாட்டாய்
மறந்து விடு என்று !
உன்னால் என்னிடம்
கூற முடியாது,
என் காதலை
அறிந்தவள் நீ !
நீ கூறினாலே
மறக்க மாட்டேன், இதில்
யாரோ ஒருவர் சொல்லி
நினைப்பதற்கும் மறப்பதற்கும்
காதல் என்ன ???????
உன் வாழ்க்கை
உன் குடும்பம் என
உனக்காக யோசித்தாயே ?
எனக்காக யோசிக்க
இன்று தான்
நேரம் கிடைத்ததோ ??
என் நேரம் அனைத்தும்
உனக்காக ஒதுக்கிவிட்டேன்..
என்றும்
உன் நினைவுகளே
என் வாழ்க்கை,
என்ற நிலையில் நான் !
நான் நானாகவே
இருக்க விரும்புகிறேன் !
நீயும் நீயாகவே
இருக்க கற்றுக்கொள் !

எழுதியவர் : பழனிச்சாமி (24-Jun-18, 7:58 pm)
சேர்த்தது : பழனிச்சாமி
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே