வாழ்விடத்தை அழித்து வழித்தடம்

பொன்விளையும் பூமியை
புண்பட வைக்க
தான் என்ற மனிதர்கள்
திரண்டுவிட்டார்கள்.

சோறுபோடும்
சொர்க்க பூமியை
சோதனைக்கு உட்படுத்த
சுயநலக்காரர்கள்
சூழுந்துவிட்டார்கள்.

எழிலான
எட்டு மலைகளை
குட்டுப் போட வைக்க
குறுபுத்திக்காரர்கள்
விறுவிறுப்பாக
கூறுபட
கூடிவிட்டார்கள்.

நெற்றி வியர்வை
நிலத்தில் விழ பாடுபட்ட
விவசாயிகளை
நிர்கதிக்குஆளாக்க
நிலையற்றவர்கள்
நெருப்பாக பாய்கிறார்கள்.

நெருப்பில் வேகுமுன்
வெறுப்பு நீராய்
விவசாயிகள்
வெகுண்டுவிட்டார்கள்.

பாட்டன் காலத்தது
பரம்பரை நிலங்களை
பங்குபட வருபவர்களை
நுங்கெடுக்கத் துணிந்துவிட்டார்கள்.

மக்களை நம்பி
மண்ணாள வந்தவர்கள்
மண்ணாசைப் பிடித்து - விவசாயி
மக்களை
மண்ணோடு மண்ணாக
மாண்டிடவே - திட்டத்தை
தீட்டினார்கள். - இவர்களின்
வாழ்விடத்தை அழித்து
வழித்தடங்கள்
வழிவகுக்க
குழி தோண்டி வருகிறார்கள்.

மாவட்டந்தோறும்
மக்கள் குறைகளைக்
கேட்டறியும் - மாவட்ட
ஆட்சியாளர்கள் - வாழும்
மக்களுக்கு குறை வைக்கலாமா?
இதுக்குத் தானா
இந்திய ஆட்சிப் பணி?

எழுதியவர் : சங்கு சுப்ரமணியன். (24-Jun-18, 7:04 pm)
பார்வை : 335

மேலே