சங்கு சுப்ரமணியன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சங்கு சுப்ரமணியன்
இடம்:  Kanchipuram
பிறந்த தேதி :  03-Sep-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2016
பார்த்தவர்கள்:  254
புள்ளி:  29

என் படைப்புகள்
சங்கு சுப்ரமணியன் செய்திகள்
சங்கு சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2018 7:04 pm

பொன்விளையும் பூமியை
புண்பட வைக்க
தான் என்ற மனிதர்கள்
திரண்டுவிட்டார்கள்.

சோறுபோடும்
சொர்க்க பூமியை
சோதனைக்கு உட்படுத்த
சுயநலக்காரர்கள்
சூழுந்துவிட்டார்கள்.

எழிலான
எட்டு மலைகளை
குட்டுப் போட வைக்க
குறுபுத்திக்காரர்கள்
விறுவிறுப்பாக
கூறுபட
கூடிவிட்டார்கள்.

நெற்றி வியர்வை
நிலத்தில் விழ பாடுபட்ட
விவசாயிகளை
நிர்கதிக்குஆளாக்க
நிலையற்றவர்கள்
நெருப்பாக பாய்கிறார்கள்.

நெருப்பில் வேகுமுன்
வெறுப்பு நீராய்
விவசாயிகள்
வெகுண்டுவிட்டார்கள்.

பாட்டன் காலத்தது
பரம்பரை நிலங்களை
பங்குபட வருபவர்களை
நுங்கெடுக்கத் துணிந்துவிட்டார்கள்.

மக்களை நம்பி
மண்

மேலும்

சங்கு சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2018 7:53 pm

இரவில் மட்டும் மின்னும் விண்மீன்.
உறவைத் தட்டும் இந்தப் பெண்மீன்.
சந்திரனைச் சார்ந்தே அது உதிக்கும்.
சந்திப்பதைச் சார்ந்தே இது குதிக்கும்.
விண்மீன் அதனால் வெளிச்சமில்லை.
பெண்மீன் இதனால் சோகமில்லை.
விண்ணைத் தொட்டே அது தோன்றும்.
கண்ணைத் தொட்டே இது தூண்டும்.
எட்டாத உயரத்தில் அது இருக்குது. - கைக்குக்
கிட்டாமல் பெண்மீன் இது நழுவுது.
விண்ணை விட்டு
மண்ணில் வீழ்ந்தால் அது மாயும். - இது
கண்ணை விட்டு நெஞ்சில் பதிந்தால்
காதல் பாயும்.
சுவாசமே இல்லாத இடத்தில் அது தோன்றுது.
ஸ்வாசமாகவே பெண்மீன் இது ஊன்றுது.
பகலில் அது மறைந்துவிடும். - பகலென்றும் இரவென்றும்
பாராமல் இது உறைந்துவிடும்

மேலும்

சங்கு சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2018 8:06 pm

தேசத்தின் உயிர் நாடியே
தேசியக் கொடியே - நீ
தலை நிமிர்ந்ததால் - நான்
தலை வணங்குகிறேன்.

உன் நலத்திற்காக
தன் நலம் பாராதவர்கள்
மண் நிலம் மீது
மீளாத் துயில் கொண்டார்கள்.

உழைப்பால் உருகும்
உடற் வியர்வையின் தெளிப்பை
உணர்த்தும் நிறம் சிவப்பு என
உன் மேனியில்
உடுத்திக் கொண்டாய்.

சாந்தமும் சமாதானமும்
சரித்திரத்தில் பதியும் என்பதால்
வானின் வெண்மேக
வெள்ளையினை நடுவில்
அணிந்துக் கொண்டாய்.

பசுமையின் வளமையே
பாரத தேசத்தின் நலம் என்பதால்
பச்சை நிறத்தையும்
போர்த்திக் கொண்டாய்.

மூவண்ணமும் - காற்றில்
மூச்சு விடுவதைப் பார்த்ததும்
மனதில் மானசீகம் விதைத்துவிட்டாய்

மேலும்

சங்கு சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2018 7:45 pm

வண்ண மலர்களுக்கு நடுவே ஒரு
வெள்ளை ரோஜா. - இது
வாடாமல் வதங்காமல்
பூத்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த
வெள்ளை ரோஜாவுக்கு
வண்ணம் பூசிப் பார்த்தார்கள்.
வண்ணம் ஒட்டாததால்
வெள்ளை ரோஜா ஆனது.

ஆம். - இந்த
வெள்ளை ரோஜா - பருவ
வயது வந்ததும் - இல்லற
வாழ்க்கை எனும்
வண்ணம் பூசினார்கள்.- இந்த
வெள்ளை ரோஜாவை தொட்ட
வண்ணத்தின் சாயம்
வெளுத்ததால் - இது
வெள்ளை ரோஜாவானது.

வண்ணம் தொட்டவரை
வண்ண ரோஜாவாய் இருந்தவரை - ஒரு சின்ன
வண்ண ரோஜாவை பூக்க வைத்தது. - ஆனால்
வெள்ளை நிறம் இந்த ரோஜாவின் மீது
கொள்ளைக் கொண்டதால் - தன்
வெள்ளை நிறத்தை இந்தப்
பூவின் மீது படரவைத்தது. - இந்த ரோஜா

மேலும்

சங்கு சுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Dec-2017 4:42 am

தனக்காக
தானே மாலை சூடினாள் ஒருத்தி.
தன்னை ஈன்றவர்களுக்காக
தான் மாலை சூடினாள் இன்னொருத்தி.
இலையில் பரிமாறிய விருந்தென
இல்லற சுகத்திற்காக கற்பினை
இன்பமுடன் பரிமாறினர் - இதனால்
மாலை சூடிக் கொண்டவர்களுக்கு
மலராகப் பூத்தன பெண் பிள்ளைகள்.
விருந்து உண்டவன் விடை பெறுதல் போல் - தானே
மாலை சூடியவளை கைக்கழுவினான்.
தலையில் விழுந்த இடியென - தான்
மாலை சூடியவளின் தலைவன்
மதிகெட்டு குடியில் மாண்டுப் போனான்.
வாழ்க்கை வெட்டியானது அவளுக்கு.
வாழ்க்கை வெட்டியது இவளுக்கு.
விவாகரத்தில் விடைப் பெற்றாள் அவள்.
விளங்காமல் தவிக்கிறாள் இவள்.
இவளும் அவளும் - பூத்த
இருமலர்களின்
நறுமணத்தில் நகர்

மேலும்

நன்றி 13-Jan-2018 9:19 pm
நன்றி. கண்டிப்பாக எழுதுகிறேன் ஐயா. 13-Jan-2018 9:19 pm
அன்பு என்ற ஒன்று உள்ளத்திற்கு சுவாசம் போல் வாழ்க்கைக்கு அவசியமானது. விதிகள் எல்லோர் வாழ்க்கையிலும் நிச்சயம் சதிகள் செய்யும். விதவையின் கண்ணீரின் பின்னால் அவள் மழலைகளின் வாழ்க்கைக்கான தீபங்கள் ஏற்றப்படுகிறது. அது அணையாமல் எரிவதும் எரியும் முன் அணைவதும் இந்த சமுதாயத்தில் பிடிக்குள் சிக்குப்பட்டுக் கிடக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Dec-2017 6:13 pm
வித்தியாசமான கோணத்தில் வியக்கும் வார்த்தைகள்.. வாழ்த்துக்கள் நண்பரே.. 13-Dec-2017 8:16 am
சங்கு சுப்ரமணியன் - சங்கு சுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2018 4:34 am

நான் தொட்டு எழுதும்
வார்த்தைகளெல்லாம்
உன்னைத் தொட்டு எழுதப்பட்ட
வரிகளாகும்.- என்னைத்
தொட்ட எழுத்துக்களில் - நான்
உன்னையேக் காண்பதால் - அதில்
உயிரெழுத்தாய் உன் பெயரைக் காண்கிறேன்.
எழுத்துக்களுக்கு உயிர் வந்தது உன்னால்தானோ?
இன்று அதை நான் உணர்கிறேன்.
என் கவிதைகளுக்கு உயிர் வந்தது
என்னவளே உன்னால் தானே. - அதனால் தான்
எழுதும் போதெல்லாம் - மெய்
எழுத்தாய் வருகின்ற இடங்களில் - உயிர்
எழுத்தாய் இருக்கின்ற உன்னைத் தொட்டு
எழுதுகின்றேன். - காகிதத்தில் பதிந்த
எழுத்துக்கள் மாறாது. - என்னுள்
பதிந்த உன் நினைவுகளும் தேயாது.- என்
இதயத் தாளில் பதிந்துவிட்டவளே.
இன்று புரட்டிப் பார

மேலும்

நன்றி வேலாயுதம் ஆவுடையப்பரே. 13-Jan-2018 3:07 am
காதல் இலக்கியம் போற்றுதற்குரிய கற்பனை காதல் உலகம் பாராட்டுக்கள் தங்கள் படைப்புகள் தொடரட்டும் 12-Jan-2018 10:22 pm
சங்கு சுப்ரமணியன் - சங்கு சுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2018 6:02 am

புள்ளிகளை கோடுகள் இணைக்கிறது - உன்
பார்வையோ என்னை இழுக்கிறது.
புள்ளிகளை இணைத்தக் கோடுகள் கோலமானது.-உன்
பார்வையில் விழுந்த என் மனமோ அலங்கோலமானது.
தறிக்கெட்டு ஓடும் வண்டியைப் போல் - நானும் உன்னால்
நெறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறேன். - என்னவளே
சரிக்கட்ட என்னோடு நீ இணைவாயோ? - காதல்
அரிசுவட்டில் கலந்து கற்றுத் தருவாயோ?
புள்ளிகள் புள்ளிகளாய் இருந்தால் கோலமாகாது - நீயும் நானும்
தள்ளியே இருந்தால் தாம்பத்தியம் கிட்டாது. - நீ
புள்ளி என்றால் நான் கோடு ஆவேன். - இந்தக்
கோடு உன்னோடு இணைந்தால் - நீ அழகான
வாழ்க்கைக் கோலத்தில் அழியாமல் பதிந்திருப்பாய்.

மேலும்

நன்றி நண்பரே. 09-Jan-2018 8:10 pm
உன் பார்வைகளின் தன்மையை வைத்த உன் குணத்தின் குழந்தைத்தனத்தை என் நெஞ்சம் கற்றுக்கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 6:39 pm
சங்கு சுப்ரமணியன் - சங்கு சுப்ரமணியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2017 7:01 am

காற்றைப் போல் என்மீது மோதியவளே - அதில்
காதல் அல்லவா சுவாசமாக வருகிறது.
கண் ஜாடையில் அம்பைத் தொடுத்தவளே - அதில்
காயம்பட்ட மனதில் அன்பை அல்லவா தெறிக்கிறது.
சொற்கள் கொண்டு கல்லாய் வீசியவளே - அதில்
சுகமல்லவா என்மேனியில் வந்து வீழ்ந்தது.
என்றுநீ என்பார்வையில் பட்டாயோ - நான்
அன்றிலிருந்து உன்நினைவு குண்டுகளால்
துளைக்கப்பட்டு இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால் நான் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி.- என்
உள்ளத்தில் உன் எண்ணங்களே மருந்து சஞ்சீவி.- என்னை
வளைத்துப் போட்டவளே - வா
வாழ்ந்துக் காட்டுவோம்.- வாழ்வின்
விடியல் நமக்காக வளைந்து வருகிறது.- அந்த
வளையத்திற்குள் ஒன்றாக இணைவோம

மேலும்

நன்றி முகமத் ஹனிபா 04-Dec-2017 6:28 pm
கரைகள் இருந்தும் காதல் அலைகளுக்குள் தான் வாழ ஆசைப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2017 5:43 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (29)

இவரை பின்தொடர்பவர்கள் (28)

கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
மேலே