காவலரின் கடமை கோனோரா வைரஸ்
கண்ணீர் மல்க காவலர் ஒருவர் 
கனிவாய் விடுத்தார் ஓர் வேண்டுகோள்.
கொரோனா வைரஸால் வரும் 
கொடூரங்களை உணர்த்தும் தூண்டுகோல்.
மக்கள் நலன் வேண்டி 
மக்களுக்காக மைய மாநில அரசு 
கொண்டுவந்தது ஊரடங்கு  - கோனோராவால் 
மாண்டுவிடக் கூடாததற்காக இணங்கு.
இணங்க வேண்டும் என்பதற்காகவே 
வணங்கியும் எச்சரித்தும் காவலர் 
ஆற்றினார் தம் கடமையினை - சுவாசிக்கும் 
காற்றைப் போல் கண்ணுக்குத் தெரிவதில்லை 
கிருமிகளின் படையெடுப்பு - மக்கள் 
வாழ்வாங்கு வாழவே - அரசாங்கம் 
கொண்டு வந்தது ந(க)டையடைப்பு .
சுற்றங்கள் சுகம் காண குற்றங்கள் செய்து 
சுகபோகமாய் சுற்றித் திரிந்தவனே - இனி 
வீட்டிற்குள் அண்டி வாழாத தனித்திரு.
நொண்டிக்கு சாக்காக சுற்றித் திரிவதைத் தவிர்த்திடு 
நொடிக்கு நொடி மக்கள் துடிப்பதைத் தடுக்கவே 
அடிக்கு அடி அரசாங்கம் கொண்டு வருகுது சட்டங்கள்.
அதனை மதித்து நடக்கணும் நமது ஆட்டங்கள்.
குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பது நீதிமன்றம்.
கொரோனா வைரஸ் அளிப்பதோ காவு மன்றம்.
உன்னை சீர்படுத்தும் சிறைவாசம் - ஆனால் 
உருக்கி எடுத்துவிடும் கொத்துக் கொத்தாய் சிதைவாசம்.
சீர்பட்டு வாழவே நீ சிறைவாசமாய் வீட்டிற்குள் இரு.
சிதைந்துப் போகத் தொற்றுண்ணியின் வேரை அறு.
 
                    
